பங்கிம் சந்திர ‘சாட்டோபாத்யாய’ (சட்டர்ஜி) எழுதிய ஆனந்த மடம் நாவலில் ஒரு பகுதியாக இடம் பெற்றது ‘வந்தே மாதரம் ’ பாடல். இந்த நாவல் வெளியிட்டது 1882இல்!
அதன் சில பகுதிகள் அதற்கும் ஓராண்டுக்கு முன்பு 1881இல் வெளிவந்தது என்று குறிப்புகள் சொல்கின்றன.
ஆனால், 1876இல் இப்பாடல் எழுதப்பட்டதாக ஆதாரப்பூர்வமான எந்தக் குறிப்பும் பொதுவெளியில் இல்லை! வரலாற்றாளர்களும் இக்கேள்வியை எழுப்புகின்றனர்.
நாட்டில் நிலவும் உண்மைப் பிரச்சினைகளை மறக்கடிக்க இப்படிப் பல பிரச்சினைக்குரிய செய்திகளை அவ்வப்போது ஒவ்வொன்றாக எடுத்துவிட்டுக் கொண்டிருக்கிறது – திசை திருப்புவதை வழக்கமாகக் கொண்ட ஒன்றிய பா.ஜ.க. அரசு!
