திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒசூர் மாவட்ட கழக சார்பில் குருதிக் கொடை ஒசூர் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணைமேயர் சி.ஆனந்தையா ஆகியோர் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வா.செ.மதிவாணன், மாணவர் கழகச் செயலாளர் க.கா.சித்தாந்தன், இளைஞரணி சுரேஷ், மாவட்டச் செயலாளர் மா.சின்னசாமி உள்ளிட்ட திரளான தோழர்கள் குருதிக்கொடை வழங்கினர். மருத்துவமனையின் டீன் மருத்துவர் லஷ்மிசிறீ குருதிக்கொடை குறித்தும் பொதுமக்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்று விளக்கி பேசினார். இந் நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ச.எழிலன், இரா.செயசந்திரன், சிலந்தி அருணாசலம், மாநகர தலைவர் து.ரமேஷ், செயலாளர் பெ.சின்னராசு, மாணவர் கழக மாவட்ட தலைவர் பி.செந்தமிழ் பகுத்தறிவு, பகுத்தறிவு கலைத்துறை மனோகரன், துரை இராவணன், சந்தோஷ், ஆகாஷ், ரவி, பாண்டியன், மாநகராட்சி மண்டல குழு தலைவர் ரவி, திமுக மாணவரணி பிரவீன் கலந்துகொண்டனர்.
