டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தி.மு.க.வுக்கு எதிராக சிபிஅய், ஈடி, அய்டி, தேர்தல் ஆணையம் என அனைத்தையும் பயன்படுத்து வார்கள்: நமது பலத்தை துல்லியமாக பயன்படுத்தி எதிர்கொள்வோம்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
* “பாஜகவின் திசை திருப்பும் தந்திரமே ‘வந்தே மாதரம்’ விவாதம்” – மக்களவையில் பிரியங்கா காந்தி சாடல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் எதிராக வந்தே மாதரம் பாடப்பட்டது: அறிஞர்களை மேற்கோள் காட்டி மக்களவையில் ஆ.ராசா அதிரடி பேச்சு. காந்தியா 1915 இல் இந்தப் பாடலைப் பாராட்டினார், ஆனால் 1940 இல் முஸ்லிம்களை புண்படுத்தும் நோக்கத்துடன் அதைப் பாடக்கூடாது என்று கூறியதாக ஆ.ராசா பேசினார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார்.
* நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கையெழுத்து திரட்டினர்
* தேர்வுகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் குறைபாடுகள் குறித்து தேசிய தேர்வு முகமை (NTA)-வை நாடாளுமன்றக் குழு கண்டித்து, பேனா மற்றும் காகிதத் தேர்வுகளுக்கு மாற வேண்டும் என பரிந்துரை.
தி இந்து:
* ஓபிசி பிரிவினருக்கு எதிரான சார்புகளை ஜாதி பாகுபாடாகக் கருத வேண்டும், என கல்வி குறித்த நாடாளுமன்ற குழு யுஜிசியிடம் பரிந்துரை; இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் நிலை நியமனங்களில் EWS இடஒதுக்கீட்டை “மறு மதிப்பீடு” செய்யுமாறும் அது அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறது.
– குடந்தை கருணா
