மருத்துவருடன் சந்திப்பு சில ஆலோசனைகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

* மருத்துவரின் ஆலோசனையைப் பெற விரும்பினால் முதலில் மருத்துவருக்கோ அல்லது மருத்துவமனைக்கோ சென்று உங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

* குறித்த நாளில் போக முடியவில்லை என்றால் உங்களால் செல்ல முடியாத நிலையைத் தெரிவிக்க வேண்டும்.

* உங்களின் தொல்லைகளைச் சிறு குறிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக: மலச்சிக்கல், தூக்கமின்மை, மூட்டுவலி, பசியின்மை போன்றவை.

* மருத்துவருடன் அவசியமற்ற உரையாடல்கள் – பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.

* கடந்த முறை மருத்துவர் கொடுத்த மருந்துச் சீட்டை மறக்காமல் உடன் எடுத்துச் செல்லுங்கள்.

* அண்மையில் செய்த மருத்துவ ஆய்வுகளைப் பற்றிய விவரங்களையும் மறக்காமல் கொண்டு செல்வது அவசியம்.

தேவையின் பொருட்டு நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் மருந்துகளையும் எடுத்துச் செல்லுங்கள்.

* உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை (அலர்ஜி) இருக்கும் பட்சத்தில் மருத்துவர் மருந்துச் சீட்டை எழுதுவதற்கு முன்னரே தெரிவித்து விடுங்கள்.

* மருத்துவரின் ஆலோசனையின்றி ஆர்வமிகுதியால் எந்தப் பரிசோதனைகளையும் செய்யக் கூடாது.

* பழைய சிகிச்சை முறைகளைப் பற்றியும், குறிப்பிட்ட அறுவை சிகிச்சை பற்றியும் மருத்துவர் கேட்டால் மட்டும் தெரிவிக்கவும்.

* மருத்துவரின் அறைக்குள் உங்களோடு ஒருவர் அல்லது இருவரை மட்டும் அழைத்துச் செல்லுங்கள்.

* கைப்பேசியை அமைதி நிலையில் (Silent Mode) வைத்துக் கொள்ளுங்கள்.

* மருத்துவர் தீவிரமாக உங்களைப் பரிசோதித்து கொண்டிருக்கும்போது மற்றவர்கள் தேவையில்லாமல் குடும்ப நிகழ்வுகளை எல்லாம் பேச வேண்டாம்.

*     முதன்முறையாக மருத்துவரிடம் செல்வதென்றால் அவரிடம் ‘கூகுள்பே’ போன்ற ‘யுபிஅய்’ வசதி இல்லாமல் இருக்கலாம். அதனால் கையில் எதற்கும் ஒரு தொகையை எடுத்துச் செல்வது நல்லது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *