6.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்; தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு.
* திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் கடும் அமளி: திமுக – பாஜக எம்.பி.க்கள் காரசார வாக்குவாதம்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கேரள முதலமைச்சரும், ஆளுநரும் உடன்படா விட்டால் பல்கலை. துணைவேந்தரை நாங்களே நியமிப்போம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மத்தியப் பிரதேசத்தில் அய்டி பூங்காக்களுக்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீடு, மேம்பாடு ஆகிய வற்றில் முரண்பாடு, சிஏஜி தணிக்கை அறிக்கை.
* திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் சர்ச்சை: சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 12 ஆம் தேதி மேல்முறையீடுகளை விசாரிக்கும்
தி டெலிகிராப்:
* “திரித்தல், அவதூறு செய்தல், பொய் சொல்லல், நியாயப்படுத்துதல்”, மோடி அரசாங்கத்தை ‘டிடிஎல்ஜே’ என்று ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* கோவில் சடங்குகள் மீதான தனிப்பட்ட உரிமைகள்’: உச்சிப் பிள்ளையார் கோயிலின் சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மீது சட்டப் பூர்வமாக தங்களுக்கு தனிப்பட்ட உரிமைகள் உள்ளன, தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனு.
– குடந்தை கருணா
