வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் வாக்காளர்களின் குடியுரிமையை முடிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உச்ச நீதிமன்றத்தில் வாதம்

புதுடில்லி, டிச.6 வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் முன்பு (4.11.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பு குறித்து மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதாடினார்.

அவர்கள் கூறியதாவது: தேர்தல்களை ஒழுங்குபடுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் போர்வையில், தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் அதிகாரங்களை மீறி செயல்படுகிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு மட்டுமே உள்ள சட்டமியற்றும் அதிகாரத்தை தானே எடுத்துக் கொள்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ளதைத் தவிர வேறெந்த படிவங்களையும் தேர்தல் ஆணையம் உருவாக்க முடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் படிவம் 4, 6 மற்றும் 7 உள்ளிட்டவை மட்டுமே இடம் பெற்றுள்ளன. அதைத் தாண்டி தேர்தல் ஆணையம் தனது சொந்த படிவங்களை உருவாக்க முடியாது.

எஸ்அய்ஆரை நடத்துவது குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்டது. அதை பல இடங்களுக்கும் ஒரே நேரத்தில் நடத்த சட்டத்தில் இடமில்லை. 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின்படி, படிவம் 7இன் கீழ் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் ஒரு பெயரைச் சேர்ப்பதற்கு யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் மட்டுமே, பிரிவு 326இன் கீழ் தேர்தல் ஆணையம் குடியுரிமையை சோதிக்க முடியும். இப்படியிருக்க, ஒரு ஆசிரியரை பிஎல்ஓவாக நியமித்து அவர் அனைவரின் குடியுரிமையை தீர்மானிப்பது எப்படி நியாயமாகும். ஒருவரின் குடியுரிமையை முடிவு செய்ய வேண்டியது ஒன்றிய உள்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதற்கு வெளிநாட்டினர் சட்டம், குடியுரிமை சட்டங்கள் உள்ளன. இதில் தேர்தல் ஆணையம் எப்படி தலையிட முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.

ஆதார் வாங்கிய வெளிநாட்டினர் ஓட்டுபோட முடியுமா?

குடியுரிமைக்கான உறுதியான சான்றாக ஆதார் அட்டையை கருத முடியாது. போலியாக அல்லது மோசடியாக ஆதார் அட்டை வாங்கியதால், ஊடுருவல்காரர் ஒருவரால் ஓட்டளிக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அப்போது நீதிபதிகள் கூறும்போது,’ ஆதார் என்பது குடியுரிமைக்கான உறுதியான சான்று இல்லை. வெளிநாட்டை சேர்ந்தவர் ஒருவர் போலியாக அல்லது மோசடியாக அவர் ஆதார் வாங்கியிருக்கலாம். அதற்காக அவரை ஓட்டளிக்க அனுமதிப்பீர்களா? எனவே, ஆதார் என்பது அடையாள ஆவணம் மட்டுமே’ என்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *