‘இண்டிகோ’ விமான சேவை ரத்து ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.6 ‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஒரு நிறுவனத்தின் ஏக போகத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஏகபோக ஆதிக்கம்

‘இண்டிகோ’ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் பாதிப்பை சந்தித் துள்ளனர். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, ஏகபோகமாக ஒரு நிறுவனத் தின் ஆதிக்கத்தில் விட்டதன் விளைவுதான் இது.

அதனால் விமானங்கள் ரத்து, தாமதம் என அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அப்பாவி மக்கள் அதற்கான விலையை கொடுக்கின்றனர். நாட்டில் எந்தத் துறையாக இருந்தாலும், ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். ஒரு நிறுவனமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருக்கக்கூடாது. இதில் மேட்ச் பிக்சிங் இருக்கக் கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.

பதில் வேண்டும்

மேலும் இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்கவும் இதற்கு சிவில் விமானப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி விதி 180-ன் கீழ் நோட்டீஸ் அளித்துள்ளார்.

அதில், “இண்டிகோ நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் பயணிகள் குவிந்துள்ளனர். இந்த விஷயத்தில் அமைச்சர் ராம் மோகன் நாயுடு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இது பொதுமக்களின் அவசர பிரச்சினை. எனவே, மாநிலங்களவையில் இதுகுறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும். அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில்…

சென்னை விமான நிலையத்திலும் 4-ஆவது நாளாக நேற்று (5.12.2025) இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களின் சேவை பாதிக்கப் பட்டது. வெளிநாடு மற்றும் உள் நாட்டு புறப்பாடு, வருகை என 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புறப்பாடு, வருகை என 22 விமானங்கள் சுமார் 6 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடு்த்து விமான நிலைய காவல்துறையினர் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து பயணி களை சமாதானப்படுத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *