மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழுவினர் இணைந்து நடத்தும் இப் பயிற்சிப் பட்டறை வரும் டிசம்பர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ளது. மாணவர்களுக்கான பயிற்சியும், உணவும், உறைவிடமும் கட்டணமின்றி வழங்கப்படும்.
தங்களுடைய இருப்பிடத்திலிருந்து பயிற்சி நடக்கும் மதுரை தமிழ்ச் சங்க வளாகத்திற்கு (மருத்துவர் தங்கராசு சாலை, சட்டக் கல்லூரி அருகில், மதுரை – 625020) வருவதும், பயிற்சி முடிந்தவுடன் மீண்டும் தங்கள் இருப்பிடம் செல்வதும் மாணவர்களின் பொறுப்பு. 100 மாணவர்கள் மட்டுமே பயிற்சிக்காக அனுமதிக்கப்படுவார்கள். கூடுதலாக விண்ணப்பங்கள் வரும் கட்டத்தில், தேர்வு நடத்திப் பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்!
கூடுதல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய கைப்பேசி எண் – 9486101547
இணைப்பு:: https://forms.gle/XcBDoWn1jTBPSC4L7
ம.கவிதா
மாநில துணைத் தலைவர்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
+919629520944
