மகிழ்ச்சியில் திளைத்த திடல் – 3

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பேராசிரியர் நம். சீனிவாசன்

தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவின் நிறைவு நிகழ்ச்சி நூல் வெளியீட்டு அரங்கமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.

‘உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை!?’

நூலினைக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும்,

‘வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி -19′ நூலினை சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டாக்டர் ஏ .கே. ராஜன் அவர்களும் வெளியிட்டு உரை நிகழ்த்தினார்கள்.

வாழ்த்துரை வழங்கிய பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்.

அவர்கள் உரையில் சங்க இலக்கியமும் ,சிந்து சமவெளி செய்திகளும் இடம்பெற்றன.

  • ‘மானமிகு’ என்ற அடைமொழியை நேசிப்பதைக் குறிப்பிட்டார்.
  • சிறுவயதில் தந்தை பெரியாரின் பேச்சைக் கேட்டதை, பெருந்தலைவர் காமராசருடன் காரில் பயணம் செய்ததை, ஆட்சி கலைக்கப்பட்ட பின் முத்தமிழறிஞர் கலைஞரைச் சந்தித்ததை நினைவு கூர்ந்தார்.
  • “சோர்வாக இருக்கும் போது ஆசிரியரைச் சந்திப்பேன்; உற்சாகமும் இளமையும் கூடுவதாக உணர்கிறேன்” என்றார்.
  • உடல்நலம் குன்றியிருந்தபோதும் ‘அகஸ்தியர் ‘ நூல் வெளியீட்டு விழாவிற்கு ரோஜா முத்தையா மன்றம் வருகை புரிந்து கலந்து கொண்டதைப் பதிவு செய்தார். ஆசிரியரின் வருகையால் அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
  • கல்வி பரவலாக்கல், பெண் உரிமையில் தமிழ்நாடு முன்னிற்பதைச் சுட்டி காட்டினார்.
  • தேர்தல் நடைமுறையில் உத்தரப்பிரதேசத்தையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டார்.
  • உலகத்திலேயே ஜான் மார்ஷல் கொண்டாடப்பட்ட ஒரே இடம் தமிழ்நாடுதான் என்றார்.
  • சிந்து சமவெளியும் கீழடியும் சிலரை உறுத்துகின்றன என்றார்.
  • பெரியார் திடலை மனச்சாட்சியின் உரைகல் என்றார்.
  • 69 சதவிகித இட ஒதுக்கீடு காப்பாற்றப்படுவதற்கு தமிழர் தலைவர் காரணமாக இருந்ததை எடுத்துரைத்தார்.
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்தும் பேசினார்.
  • “Booth level officer நான் உருவாக்கியது; பழத்தை நறுக்குவதற்கு உருவாக்கப்பட்ட கத்தி, கழுத்தை அறுத்து விடக்கூடாது” என்று குறிப்பிட்டார்.
  • இட ஒதுக்கீட்டுக்கு, பெண்கள் சொத்துரிமைக்கு தமிழ்நாடே முன்னோடி என்றார்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ தொகுதி 19 நூலினை வெளியிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி ஏ.கே.ராஜன்   உரையாற்றும்போது,

  • திசுக்களின் சிதைவே மூப்பு. திசுக்களைச் சிதையாமல் வைத்திருக்கிறார் தமிழர் தலைவர்; எனவே அவருக்கு மூப்பு தெரியவில்லை என்றார்.
  • ‘வாழ்வியல் சிந்தனைகள்’ புத்தகத்தை முழுமையாக வாசித்திருந்த நீதிபதி, அதிலிருந்து ஏராளமான கருத்துகளை கூட்டத்தில் விருந்து வைத்தார்.
  • சுறுசுறுப்பும் மனமகிழ்ச்சியும் மனதை இளமையாக வைத்திருக்கும் என்றார்.
  • பாசப்பிணைப்பிற்குத் தந்தை பெரியார் – அண்ணா சந்திப்பை எடுத்துக்காட்டாகக் கூறினார்.
  • SIR பற்றி புத்தகம் எழுதியிருப்பதைக் குறிப்பிட்டார்.

இலக்கியத்தில் சிகரம் தொட்டவர்
கவிப்பேரரசு வைரமுத்து.

இலக்கியத் தளங்கள் அனைத்திலும்
முத்திரை பதித்திருக்கிறார்.

ஆசிரியர் அய்யா அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு நிகழ்த்திய உரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது.

  • வைரமுத்து தமிழ் – ஆற்றல்மிக்கது ; எல்லோராலும் விரும்பப்படுவது.
  • ஆசிரியர் அய்யாவைக் கொண்டாடினார்.
  • ஆழமான கருத்துகளை இனிய தமிழில் அருவியெனக் கொட்டினார்.
  • அவருடைய நடை அரங்கத்தைக் கட்டிப் போட்டது.
  • தமிழர் தலைவரின் ஆற்றலைப் பட்டியலிட்டார்.
  • செயல் திறனை வியந்தார்.
  • ஆசிரியரின் சுறுசுறுப்புக்கு அணிலை உவமையாகச் சொல்லத் தொடங்கியவர் , வெளியில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்ததால் காட்டு வெள்ளத்தின் பிரவாகத்தையும் இணைத்துக் கொண்டார்.
  • அகராதியைப் போன்ற நினைவாற்றல் என்று புதிய உவமையால் திக்கு முக்காட வைத்தார்.
  • அவர் பேச வரும் முன் மேடையில் ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். தமிழர் தலைவர். அதனைத் தன் ‘கள்ளக்கண்ணால்’ கண்ட கவிப்பேரரசு தம் உரையில் அதை வெளிப்படுத்தும்போது ஒரு ராஜாங்கமே நிகழ்த்தி விட்டார்.

முதுமையில் தன் கையெழுத்து கோணல் மாணலாகிப் போனதாகக் கலைஞர் தன்னிடம் காட்டியதைச்  சோகம் ததும்ப நினைவு கூர்ந்தார்.

ஆசிரியரின் கையெழுத்து மாறாமல் இருக்கிறது; தெளிவாக இருக்கிறது; உணர்ச்சி உண்மையாக இருக்கிறது என்று அடுக்கிய கவிப்பேரரசு, “விரல்கள் நடுங்கவில்லை; இதயம் அடங்கவில்லை; கொள்கை முடங்கவில்லை” என்று ஜீவன் சிலிர்க்கச் சிலிர்க்க குரலை உயர்த்தி  கூட்டத்தை உணர்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தினார்.

  • நுட்பமாய்ப் பேசுவது கவிப்பேரரசுவின் இயல்பு. ஒரு விஷயத்தைப் பகுத்துப் பகுத்துத் துல்லியமாய் விளக்குவார். இந்தக் கூட்டத்திலே வயதை மூன்றாகப் பிரித்துக் காட்டினார். காலண்டர் சொல்லும் வயது, உடம்பு சொல்லும் வயது, மனது சொல்லும் வயது என்று பட்டியலிட்டார்.
  • தமிழர் தலைவரின் மகத்தான பணியை சொல்லோவியம் தீட்டிக் காட்டினார் ; ஒவ்வொரு சொல்லும் கேட்பவர்களின் மனதில் சித்திரமாய் விரிந்தது; சொல்லுக்குள் இருந்த ஆழமான கருத்து அழுத்தமாகப் பொதிந்திருந்தது.
  • “காலம் கருணைமிக்கது; தமிழர்களுக்கு நன்மையே செய்திருக்கிறது.

அறிஞர் அண்ணா மறைந்தார் ; ஒரு வெற்றிடம் உருவானது.

வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது விதி;

கலைஞர் காற்றாக வந்து நிரப்பினார் .

பெரியார் மறைந்தார் ; ஒரு வெற்றிடம் உண்டானது.

ஆசிரியர் வீரமணி காற்றாக வந்து நிரப்பினார் .

கலைஞர் இல்லையென்றால் பெரியார் கண்ட ஆட்சி இருந்திருக்காது;

வீரமணி இல்லையென்றால்

பெரியாருக்கு இத்துணை நீட்சி இருந்திருக்காது”

என்றார்.

  • இளமைப் பருவத்திலேயே தமிழர் தலைவர் சாதனை படைத்ததைச் சொல்ல வந்த கவிப்பேரரசு, உலக வரலாற்றில் இளமைப் பருவத்தில் சாதனை படைத்தவர்களின் பட்டியலை மூச்சு விடாமல் தொடுத்தார்; சர வெடியாய் வெடித்தார் ; அரங்கம் வியந்து மகிழ்ந்து கரவொலி எழுப்பியது.
  • திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும் என்றார் தந்தை பெரியார். அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தன் பேத்தியிடம் ‘திருமணம் என்ற காலாவதியான பந்தத்தில் மாட்டிக் கொள்ளாதே ‘என்று அறிவுறுத்தியதைக் கூட்டத்தில் வெளிப்படுத்தினார்.
  • கவிப்பேரரசு , திரைப்படத்திற்குப் பாடல்களை எழுதிக் கொடுக்கும்போது இயக்குநர்கள் மகிழ்ச்சி பொங்க வாங்கிச் செல்வார்கள். சிலர் பாடல்களில் சில ‘முந்திரி’களைப் போட்டுத் தரும்படி கேட்பார்கள். பெரியார் திடல் சொற்பொழிவில் போடப்பட்ட முந்திரி தான் ‘மைசூர் போண்டா’.
  • இந்தத் தலைவர் வாழும்போதே கொண்டாடப்பட வேண்டியவர் என்றார்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் உரை அரங்கத்தில் உற்சாக அலையை உருவாக்கியது; எழுச்சியை ஏற்படுத்தியது.

பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.

தமிழர் தலைவரின் 45 நிமிட நிறைவுரை உணர்ச்சிமயமானது; அடக்கம் நிறைந்தது; கொள்கைப்பூர்வமானது. அவர் தம் உரையில்,

  • அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
  • சமூகநீதி இன்னமும் கிடைக்கவில்லை என்பதை விளக்கினார்.
  • அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தையும் , மனுநீதிப் புத்தகத்தையும் எடுத்துக் காட்டி விளக்கினார்.
  • உயர்ஜாதி ஏழைகள் என்பது நாணயக்கேடு என்றும், நாம் நாள்தோறும் வஞ்சிக்கப்படுவதையும் எடுத்துரைத்தார்.
  • 50 சதவிகிதத்திற்கு மேலே இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலுமில்லை என்று உறுதிப்படத் தெரிவித்தார்.
  • இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.
  • மருத்துவக் கல்லூரியின் உயர் படிப்பில் உயர்ஜாதி ஏழைகள் என்ற பெயரில் ஏமாற்றி இடம் பிடித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘ரத்தம் கொதிக்கிறது’ என்றார்.
  • தந்தை பெரியாரின் டைரியில் குறித்து வைத்திருக்கின்ற குறிப்புகளைச் சுவைபடை எடுத்துரைத்தார்; அதிலே கொள்கைத் தாகம் புரிந்தது.
  • கருப்புச் சட்டைக்காரர்கள் அணிந்திருப்பது ஈரோட்டுக் கண்ணாடி என்றார்.
  • தந்தை பெரியார் தம்முடைய இதழ்களுக்குக் கொள்கை அடிப்படையில் பெயர் சூட்டியதையும் நினைவு கூர்ந்தார்.
  • தமக்கு உற்சாகத்தைத் தருபவர்கள் எதிரிகள் என்று குறிப்பிட்டார்.
  • பெரியார் பிறந்தநாள் மலருக்கு ராஜகோபாலாச்சாரியாரைச் சந்தித்துக் கட்டுரை கேட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
  • பொது நலமே தமக்கு சுயநலம் என்று கூறிய தந்தை பெரியாரின் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டார்.
  • 2026 தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வரவேண்டும்;

நம்முடைய வாழ்க்கை பிறருக்குப் பயன்பட வேண்டும் என்று கூறி தம் உரையை நிறைவு செய்தார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற தமிழர் தலைவரின் பிறந்தநாள் நிகழ்ச்சி பிரச்சாரத் திருவிழாவாக அமைந்தது. தோழர்கள் சங்கமிக்க வாய்ப்பானது. புத்துணர்வு பெறுவதற்குக் களமானது. பெரியார் உலகத்தின் வளர்ச்சியைப் பறைசாற்றியது.  திடல் மகிழ்ச்சிக் கடலானது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *