தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு கழக அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர் சா.இராஜேந்திரன் ஆகியோர் பயனாடை அணிவித்து பெரியார் புத்தகங்களை வழங்கினர். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் மேனாள் அமைச்சர் பி. பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய (மேற்கு) செயலாளர் சரவணன், திமுக தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் கவுதம்,இளைஞர் அணி சங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.