தருமபுரி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
தருமபுரி, டிச. 3– தர்மபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் தர்மபுரி பெரியார் மன்றத்தில் 27.11.2025 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு தருமபுரி மாவட்டத் தலைவர் காமலாபுரம் கு.சரவணன் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் பீம தமிழ் பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் மாரி.கருணாநிதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கதிர் செந்தில்குமார் ஆகியோர் உரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன் வழிகாட்டுதல் உரையாற்றினார். அவர் தமது உரையில், தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டாம் தவணை பெரியார் உலக நிதி ரூ. 10 லட்சத்தை திரட்ட தோழர்கள் ஒத்துழைப்போடும் முனைப்போடும் செயல்பட வேண்டும்.
உலகம் முழுவதும் மிகப்பெரும் வரலாறாக போற்றப்படக் கூடிய வகையில் உருவாக இருக்கின்ற திருச்சி சிறுகனூரில் அமைந்துள்ள பெரியார் உலகத்திற்கு, தோழர்கள், தோழியர்கள் தங்களின் பங்களிப்பை அந்தப் பெருமை மிக்க வரலாற்றில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தோழர்கள் தமிழர் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, 50 விடுதலை சந்தாக்கள், பெரியார் பிஞ்சுகள் தமிழர் தலைவரிடம் பிறந்தநாள் அன்று தருவதெனக் கூறினார் என்றும், அதற்கு உண்டான சந்தா சேர்ப்பு பணியில் தோழர்கள் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .
பெரியார் உலகம் நிதி வசூலுக்காக 5 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் அய்யா கதிர், தொழிலாளர் அணி தலைவர் சிசுபாலன், தொழிலாளர் அணி செயலாளர் மாணிக்கம், தர்மபுரி நகர செயலாளர் இரா.பழனி, தொழிலாளர் அணி சங்கர், மகளிர் அணி சிகாமணி, விவசாய அணி செயலாளர் ஊமை காந்தி, ஆகியோர் கலந்து கொண்டனர் ..
தீர்மானங்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, தருமபுரி தந்தை பெரியார் சிலை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலை, அறிஞர் அண்ணா சிலை, பெருந்தலைவர் காமராஜர் சிலை ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், தமிழர் தலைவரின் பிறந்தநாள் வாழ்த்து பதாகைகளை வைத்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட வேண்டும்.
இதுதான் ஆர்எஸ்எஸ்! இதுதான் பாஜக ஆட்சி! இதுதான் திராவிடம்! இதுதான் திராவிட மாடல் ஆட்சி !! என்ற கருத்தாக்கத்தில், தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்பிக்கும் பொதுக்கூட்டம், 29/12/2025 அன்று நடைபெற உள்ளது.
பொதுக் கூட்டத்தினை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளருமான வழக்குரைஞர் ஆ மணி துவக்கி வைக்க உள்ளார்.
இந்தியா கூட்டணியில் உள்ள, தமிழகத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும், பங்கேற்க வைத்து, பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும்.
நடைபெற இருக்கும் பெரியார் உலக வசூலுக்காக, நம்முடைய ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்த ஆசிரியர் அனைவரையும் சந்தித்து, பெரியார் உலகத்திற்கான நிதி வசூல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் பிரிவினைவாதிகள் என்றும், தீவிரவாத போக்குடை யவர்கள் என்றும் அவதூறு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்களை கண்டித்து 4/12/2025 ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
2/12/2025 இன்று தமிழர் தலைவரை சந்தித்து தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பாக 20 விடுதலைச் சந்தாக்கள் அழைக்க வேண்டும் என்றும்
பெரியார் உலக நிதிவசூல்
பணிக் குழு
பணிக் குழு
தர்மபுரி நகரம் – தகடூர் தமிழ்ச்செல்வி மாநில மகளிர் அணி செயலாளர், துணைத் தலைவர் பொதுக்குழு உறுப்பினர், க. கதிர் பொதுக்குழு உறுப்பினர், செயலாளர் இரா பழனி தர்மபுரி நகர செயலாளர், பொருளாளர் தி.அன்பரசு
குழு உறுப்பினர்கள் – கரு பாலன், பெண் கோகிலா சிகாமணி, ராமச்சந்திரன் மாமனியப்பன், பெ கோவிந்தராஜ், மா சுதா,
குழு இரண்டு – தர்மபுரி ஒன்றியம் தலைவர் பீமா தமிழ் பிரபாகரன் மாவட்ட செயலாளர், செயலாளர் ஏ கிருஷ்ணமூர்த்தி மாவட்ட பகுத்தறிவாளர்களாக செயலாளர், பொருளாளர் ஆ சங்கீதா பொதுக்குழு உறுப்பினர்
குழு உறுப்பினர்கள் – எஸ்.கே.வீரமணி, இனிய பிரபாகரன், த மணிவேல், கே.ஆர்.குமார்,
குழு மூன்று – பாலக்கோடு பாப்பாரப்பட்டி, தலைவர் இ. மாதன், மாவட்டத் துணைத் தலைவர், துணைத் தலைவர் ஜீவா கிருஷ்ணன், செயலாளர் சின்னராசு, விடுதலை வாசல் வட்டத் தலைவர், துணைச் செயலாளர் அறிவொடை நம்பி, பொருளாளர் கா சுந்தரம்
குழு உறுப்பினர்கள் – வாசு வினோபாஜி நரசிம்மன்
குழு நான்கு – காரிமங்கலம் தலைவர் கு.சரவணன், மாவட்டத் தலைவர் பிசிஆர். மனோகரன், ஒன்றிய பாக்கா தலைவர் காரியமங்கலம், துணைத் தலைவர் சிசு பாலன், தொழிலாளர் அணி மாவட்ட தலைவர், துணைச் செயலாளர், செயலாளர் கதிர் செந்தில்குமார், மாவட்டத் தலைவர். ப.க துணைச் செயலாளர் பெ.மாணிக்கம் பொருளாளர் மா செல்லதுரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
குழு உறுப்பினர்கள் – ராஜா, சின்னசாமி, டெய்லர் முத்து, இரா.ராமசாமி
குழு 5 – பென்னாகரம் நல்லம்பள்ளி, தலைவர் அ.தீர்த்தகிரி பொதுக்குழு உறுப்பினர், துணைத் தலைவர், நா. அண்ணாதுரை, மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர், செயலாளர் சி. காமராஜ் மாவட்ட துணைச் செயலாளர், பொருளாளர் மு பரமசிவம், உறுப்பினர்கள், மாத செந்தில் பெ.கோவிந்தராஜ், பொருளாளர், மு .பரமசிவம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
தர்மபுரி கழக மாவட்டத்தின் மாணவ, மாணவரணி சார்பாக தமிழர் தலைவர் அவர்களுக்கு எடை நாணயம் வழங்கி அதில் வருகின்ற தொகையை பெரியார் உலகத்திற்கு வழங்கிடுவதாக கூறினார்.
எஸ் கே வீரமணி, எஸ். இனியன் பிரபாகரன், செம்மல் வீரமணி, இளந்தமிழன், ஈழவேந்தன், நாத்திகன், அன்புமணி, உதயகுமார், தென்னரசு பெரியார், ராவணன், சித்தார்த் அம்பேத்கர், நிரஞ்சனா அம்பேத்கர், அன்றில், அகரன், யாழ் இலக்கியா, வசந்தகுமார், கனிமொழி,கோ.பகுத்தறிவு, கோ.தமிழினி, கோ. பேரறிவுயாழினி,கோ.கலையரசன், ம.தன்யா,மா.அபிநயா, கா.விடுதலைவிவேகா, கா.தமிழ்யாழினி, சி.மணியம்மை,சி.முகிலன், அன்புமதி, நவாயனா, இளந்தமிழ், சுகந்தி, இசை அருவி, தமிழிசை மற்றும் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
