கல்லக்குறிச்சி, டிச.3– திராவிடர்கழக மேனாள் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் 93ஆவது பிறந்த நாளையும் 12ஆம் ஆண்டு நினைவு நாளையும் முன்னிட்டு இந்த ஆண்டும் வழக்கம் போல் மாவட்ட கழகத்தில் 2 நபர்களுக்கு விருதும், ரூபாய் தலா அய்ந்து ஆயிரமும் வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
30.11.25 காலை 11மணிக்கு கல்லக்குறிச்சி சேலம் பிரதான சாலையில் உள்ள எஸ்.எம் டவர் சொற்பொழிவு அரங்கில் மாவட்ட கழக காப்பாளர் ம.சுப்பராயன் தலைமையில், மாவட்ட கழக தலைவர் வழக்கு ரைஞர் கோ.சா.பாஸ்கர் அனைவரையும் வரவேற் புரையாற்றியும் மாவட்ட ப.க இலக்கிய அணி தலைவர் பெ.சயராமன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய கழக தலைவர் செல்வ சக்திவேல், மாவட்ட கழக துணைச் செயலாளர் பா.முத்து, உலகியநல்லூர் கழக தலைவர் ராஜேந்திரன், மணலூர்பேட்டை சக்தி,ஏ.கலைஞன், மாவட்ட ப.க தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட கழக இணைத் தலைவர் கரிகாலன் ஆகியோர் முன்னிலை உரையாற்றியும் பெரியார் வீரமணி சமூக நீதி விருது மாவட்ட கழக பொதுக்குழு உறுப்பினர் திருக்கோயிலூர் அய்யா பாலன் அவர்களுக்கும், பெரியார் சாமிதுரை சமூக நீதி விருது மாவட்ட கழக மகளிரணி தலைவர் பழனியம்மாள் கூத்தனுக்கும், ஆத்தூர் மாவட்ட கழக காப்பாளர் த.வானவில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மாவட்டம் முழுவ திலும் இருந்த ஏராளமான கழகத் தோழர்களும் பொது மக்களும் கலந்து கொள்ளும் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் பொருளாளர் குடும்பத்தின் சார்பில் மாவட்ட தலைவர் கோ.சா.பாஸ்கர் அவர்களும், மாநில மருத்துவரணி செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு வழங்கி சிறப் பித்தார்கள். இந்நிகழ்வின் இறுதியில் பெரியார் உலகம் நிதியாக மாவட்ட மகளிரணி தலைவர் பழனியம்மாள் கூத்தன் ரூபாய் பத்தாயிரம்,தி.க பொதுக்குழு உறுப்பினர் திருக்கோயிலூர் தி.க. பாலன் ரூபாய் ஆறு ஆயி ரமும் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கரிடம் வழங்கி மகிழ்ந்தார்கள்.
