கடலூரில் பிறந்த
கருஞ்சட்டை வீரரின்
தியாகத்திற்கு வயது
தொண்ணூற்று மூன்று
ஆம்
தொண்ணூற்று மூன்று.
தந்தை பெரியாரின்
கொள்கை வாரிசுக்கு
டிசம்பர் இரண்டு
பிறந்த நாள்!
தடம் புரளாத் தன்மானத்
தலைவருக்கு
பிறந்த நாள்!
எட்டு வயதில் கழகத்து
மேடை ஏறி
எவரும் எண்ணமுடியா
சாதனைகள்
பலவும் செய்து
அறிவு வழியில் கழகத்
தொண்டர்களை
வழிநடத்தும்
ஆசிரியர் வீரமணிக்குப்
பிறந்த நாள்!!
30 சி சட்டம் தந்து மக்கள்
பயன்பெற
69 சதவீத இடஒதுக்கீடு
காண வழி செய்த
சமூக நீதிக் காரணமே
சமத்துவ நாயகனே !
அய்யாவின் புகழ் பரப்பும்
அறிவுலகத் தேனீயே
ஆசானே வாழியவே!
திராவிட மணியின்
சீடரே
தியாகச் சுடரே வாழியவே!
பெரியார் உலகம் படைப்பவரே
உலகம் பெரியார் மயம்
ஆக்கியவரே
கலகமில்லா தமிழ்நாடு
சமைத்திடவே
களங்கமிலா வழிகள்
பல சொல்பவரே
திராவிட த்தின் தீரரே
ஜாதி ஒழியவும்
தமிழர்
தன்மானம் பெற்றிடவும்
தளராது உழைப்பவரே
தகைசால் தமிழரே!
மனித நேய மாண்பாளரே
எங்கள் தலைவரே
ஏந்தலே
வாழிய நீவீர் நலமோடு!!
ஆரிய விசப்பாம்பின்
வீரியம் அழிவதற்கும்
ஸநாதன நரிக்கூட்ட
சூழ்ச்சிகள் மாய்வதற்கும்
பாசிசக் கொடியவர்கள்
கொட்டம் வீழ்வதற்கும்
திராவிட வெற்றித்
தொடர்வதற்கும்
நாளும் பணியாற்றும்
‘விடுதலை’ ஆசிரியரே
திராவிடப் போர்வாளே
தியாகச் சுடரே!
வாழ்த்தி வணங்குகிறோம்
வாழிய நீ பல்லாண்டு!
அய்யா அன்னை வழி
தொடரட்டும் நூறாண்டு
– ச.மணிவண்ணன்
மாவட்ட தலைவர்
திராவிடர் கழகம், துறையூர்.
