சென்னை, மே.6- சிதம்பரம் குழந்தைகள் திருமண வழக்கு தொடர்பாக சிறுமி களிடம் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட வில்லை என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
ஆளுநரின் பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பரபரப்பு கருத்துகளை கூறியிருந்தார். அதில் அவர், ‘சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் சமூகநலத்துறை அதி காரிகள் அவர்கள் மீது குழந்தை திருமண குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
அதன் அடிப்படையில் அவர்களது உறவினர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 6 மற்றும் 7ஆம் வகுப்பு படிக்கும் மாண விகளை வீட்டில் இருந்து வலுக்கட்டாய மாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரு விரல் கன்னித் தன்மை பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதனால் சிறுமிகள் சிலர் தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்’ என்று தெரி வித்திருந்தார். ஆளுநரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் விளக்கத்தை கேட்டு தலைமை செயலாளர் இறையன்புக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளது.
காவல்துறை தலைமை இயக்குநர் விளக்கம்
இந்த நிலையில் சிதம்பரம் குழந்தை திருமணம் தொடர்பாக வெளியாகி உள்ள தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந் திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று (5.5.2023) வெளியிட்ட செய்திக் குறிப் பில் கூறியிருப்பதாவது:-
குழந்தை திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில் அதன் உண் மைத்தன்மை மற்றும் ஆதாரங்களை திரட்டிய பின்னர்தான் சிதம்பரம் நகர காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 4 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன. இந்த குற்றத் தில் தொடர்புடைய 8 ஆண்கள், 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரையின்படி 2 சிறு மிகள் மட்டும் மருத்துவ பரிசோத னைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களி டம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் 2 விரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
அந்த சிறுமிகள் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது பொய்யான தகவல். அது போன்ற நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை.
பொய்யான குற்றச்சாட்டு
4 குழந்தை திருமணங்கள் நடந்தது உண்மை என்பதற்கு ஆதாரங்கள் இருந்தன என்பதால் காவல் நிலையங் களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட் டது என்பது முழுக்க, முழுக்க பொய்யான குற்றச்சாட்டு ஆகும். அதோடு இதனால் சிறுமிகள் சிலர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பதும் பொய்யான குற்றச்சாட்டு என்பதை காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.