பெரியாரின் தொண்டர்களுக்குத் தொண்டன் நான் !
தமிழர் தலைவரின் அன்றாடக் கூற்று
பெரியார் தந்த புத்தி போதும்
சொந்த புத்தி வேண்டாம் !
நினைவெல்லாம் பெரியார்
செயலெல்லாம் பெரியார்
இவரன்றி வேறொருவர் நமக்கெல்லாம் இல்லை !
தொண்டர்களின் அன்பே ரத்த ஓட்டம்
தொண்டர்களின் உழைப்பே உற்சாக மருந்து !
இளைஞரும் தோற்பார் இவருடன் நடந்தே
எதிரிகள் நடுங்கும் கருத்துக் கருவூலம்
ஆட்சியின் மாட்சி பெருமையில் சிறக்கும்
உலகே வியக்கும் பெரியார் பேச்சும் எழுத்தும்
மனித நேயமே உலகை ஆண்டிடும் !
கொள்கை வீரர் வீரமணி வாழ்க !
தமிழர் தலைவர் நீண்டு வாழ்க !
– சோம.இளங்கோவன்
