அகவை 93 இல் அடியெடுத்து வைக்கிறார் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

தமிழ் கேள்வி தி. செந்தில்வேல்
மூத்த ஊடகவியலாளர்

எங்களைப் போன்றோருக்கு எப்போதெல்லாம் உடலும் உள்ளமும் சோர்ந்து போகிறதோ அப்போதெல்லாம் அதைப் போக்கும் அருமருந்து ஆசிரியரின் இனமான உணர்வூட்டும் வார்த்தைகளும், 93 வயதிலும் கருத்தியல் தடுமாற்றமில்லா அவரின் வேகமும் தான். மானமிகு அய்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லி மகிழும் அதே வேளையில் , இந்த சிறப்பிதழில் எனது கட்டுரைக்கு வாய்ப்பளித்தமைக்கும் நன்றி சொல்லி மகிழ்கிறேன்.

2026 தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் அரசை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த தமது பரப்புரையைத் தொடங்கி களத்தில் இறங்கியுள்ளார் ஆசிரியர் அவர்கள். இந்தத் தருணத்தில் கடந்த இரண்டு தேர்தல்களில் நடந்தவற்றை எண்ணிப் பார்க்கின்றேன்.  வழக்கம் போல ஸநாதன மனுவாதிகள் தி.மு.க.விற்கு எதிராக களமிறங்கியபோது, மூத்த பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பலரும் ஒரு கேள்வியை பொது வெளியில் முன் வைத்தனர். தி.மு.க.விற்கு துணிவிருந்தால் வீரமணியை பரப்புரைக்கு பயன்படுத்த முடியுமா? என்று கேள்வியை எழுப்பிக் கொக்கரித்தனர். அப்படி ஒரு வேளை வீரமணி அவர்கள் பரப்புரை செய்ய வந்தால் ஹிந்துக்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றெல்லாம் கதை அளந்தார்கள். ஆனால், வழக்கம் போல சமூக நீதி அரசை அமைப்பதில் பெரும் பங்காற்றி வரும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த தேர்தல்களிலும் தனது வீரியமிக்க பரப்புரையை தி.மு.க. கூட்டணிக்காக முன்னெடுத்தார். வழக்கம் போல தி.மு.க. கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளைப் பெற்றது.

சமூக நீதியின் பாதையில் தொடர்ந்து இந்த மண்ணை ஆள்பவர்கள் பயணிக்க வேண்டும் என்ற கருத்தியலில் உறுதிப்பாடு கொண்டவர் நம் ஆசிரியர் அவர்கள். அதனால்தான், இன்றைக்கு தமிழ்நாட்டை ஆளும் நம் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், ‘திராவிடர் கழகம்தான் எங்களுக்கு வழிகாட்டி’ என்று உரக்கச் சொல்கிறார் எனில், அதன் பொருள் தி.மு.க. அரசு செல்ல வேண்டிய சமூக நீதிப் பாதையின் திசைகாட்டியாக ஆசிரியர் வீரமணி திகழ்கிறார் என்ற மாண்புமிகு முதலமைச்சரின் நம்பிக்கையே. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடே திராவிட மாடல் அரசு ஆசிரியருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி மகிழ்ந்தது.

மக்களவைத் தேர்தல் நினைவிருக்கிறதா?

இந்தத் தருணத்தில் 1980ஆம்   ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை நான் எண்ணிப் பார்க்கிறேன். வீழ்த்தவே முடியாது என்றிருந்த எம்.ஜி.ஆர். அந்தத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தார். ஆம், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 இடங்களில் 37 இடங்களில் தி.மு.க. மகத்தான வெற்றியைப் பெற்றது. அந்தத் தேர்தலில் ஆசிரியர் வீரமணி அவர்கள்
அ.தி.மு.க.விற்கு எதிராக வலிமையான பரப்புரையை மேற்கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காரணம் சமூக நீதிக்கு எதிராக அப்போது, எம்.ஜி.ஆர். அவர்கள் இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல்களைக் கொண்டு வந்தார் . அதைக் கடுமையாக எதிர்த்தார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு படுதோல்வி. இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் முயற்சியை எம்ஜிஆர் எடுத்தார் என்ற காரணத்தினால் எம்ஜிஆரை எதிர்த்த அதே ஆசிரியர் அவர்கள் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 9ஆவது அட்டவணைப் பட்டியலில் வைத்து பாதுகாக்க வழிகாட்டினார் என்பதும் வரலாறு.

சமூக நீதியின் பாதையில் தொடர்ந்து இந்த மண்ணை ஆள்பவர்கள் பயணிக்க வேண்டும் என்ற கருத்தியலில் உறுதிப்பாடு கொண்டவர் நம் ஆசிரியர் அவர்கள். அதனால்தான், இன்றைக்கு தமிழ்நாட்டை ஆளும் நம் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், ‘திராவிடர் கழகம்தான் எங்களுக்கு வழிகாட்டி’ என்று உரக்கச் சொல்கிறார் எனில், அதன் பொருள் தி.மு.க. அரசு செல்ல வேண்டிய சமூக நீதிப் பாதையின் திசைகாட்டியாக ஆசிரியர் வீரமணி திகழ்கிறார் என்ற மாண்புமிகு முதலமைச்சரின் நம்பிக்கையே. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடே திராவிட மாடல் அரசு ஆசிரியருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி மகிழ்ந்தது.

காதில் அறுவைச் சிகிச்சை
நடந்த போதும்!

நான் சமீபத்தில் ஆசிரியர் அவர்களுக்கு காதில் அறுவை சிகிச்சை நடந்ததை அறிந்து அவரின் நலம் விசாரிக்க நானும், தங்கை மதிவதனியும் திடலுக்குச் சென்றிருந்தோம். அறுவை சிகிச்சைக்குப் பின் அன்றுதான் அவர் திடலுக்கு வருகை தந்திருந்தார். அறுவை சிகிச்சைக்குப் பின்னரான சிகிச்சைக்காக அவரின் காதில்  பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது. அய்யாவின் உடல் நிலை சார்ந்த ஒரு சிறு பதட்டத்தை எங்கள் இருவருக்கும் அது தந்தது. அருகில் சென்று வணக்கம் கூறினோம். அடுத்த நொடியே வழக்கமான அவரது தீர்க்கமான குரலில், ‘‘நல்லாயிருக்கீங்களா?’’ என்றவர், சம கால அரசியல் குறித்து விவாதிக்கத் தொடங்கி விட்டார்.

மருத்துவமனையில் இருந்தவாறே தொடர்ந்து ‘விடுதலை’க்கு அவர் எழுதிய கட்டுரைகள் குறித்து உரையாடல் தொடங்கியது. நாங்கள் மலைத்துப் போய் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தோம்.  உடலோ, உள்ளமோ சிறு சோர்வு ஏற்பட்டாலும், தளர்ந்து போய் நம்மில் பலர் நமக்கான பணிகளையே செய்வதை நிறுத்திவிடுகிறோம். ஆனால், ஆசிரியர் 93 வயதிலும், உடல்  சோர்வு, உள்ளச் சோர்வை எல்லாம் புறம் தள்ளி பொதுவாழ்வுப் பணிகளை தொய்வின்றி செவ்வனே செய்து வருவது வியப்புக்குரியது.

சிந்தனை எல்லாம் ‘பெரியார் உலகமே!’

23-07-2025 அன்று  ஆசிரியர் அவர்களிடம் இருந்து வந்த அறிக்கை, இவ்வாறு சொல்கிறது. “காது வலி சிகிச்சைக்காக 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வருகிறேன்.” கழகத் தோழர்களே ஊக்கத்துடன் செயல்படுங்கள். என் சிந்தனையெல்லாம் ‘பெரியார் உலக’ப் பணி மீதுதான். விரைவில் நலமுடன் மீண்டும் வந்து உங்களுடன் இணைவேன்.” இந்த அறிக்கையின் வரிகள் சொல்லிச் செல்லும் ஆசிரியரின் வழியை, வாழ்வை.. ஆம் தோழர்களே,  மருத்துவமனையில் இருந்தபோதும் அவரின் சிந்தனையெல்லாம் ‘பெரியார் உலகம்’ குறித்தே இருந்தது. இப்போதும் அது குறித்தே உள்ளது. அதனால்தான், நமது முதலமைச்சர் அவர்கள் செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில், முதலமைச்சர் முதல் தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் ஒரு மாத ஊதியத்தை பெரியார் உலகின் பணிகளுக்காக நன்கொடையாகத் தருவதாகக் கூறினார்.

பெரியாரியப் பார்வையிலேயே தமிழ்நாடு அரசு நடைபோட வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பம். தமிழ்நாட்டில் பெரியாரியச் சிந்தனைகளை மழுங்கடித்திட வேண்டும், பெரியாரைப் போற்றிப் புகழாத ஓர் அரசு அமைந்திட வேண்டும் என்றால் தி.மு.க. வை தேர்தல் அரசியலில் வீழ்த்திட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க. பல்வேறு வகைகளிலும் சதித்திட்டம் தீட்டி வருகிறது. அதை தெளிவாக உணர்ந்த நம் ஆசிரியர் அவர்கள் 27 – 07 – 2025 அன்று ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில் தெளிவாகச் சொல்கிறார், ” எதிரிகள் விபீடணர்களைப் பயன்படுத்தி என்ன வியூகம் வகுத்தாலும், 200 இடங்களுக்கு மேல் பெற்று திராவிட மாடல் அரசு மீண்டும் அமைவது உறுதி ”  என்று சூளுரைக்கிறார்.

நேரடி எதிரிகளைவிட…

ஆம், நேரடி எதிரிகளை விட இன்றைக்கு பா.ஜ.க. வின் வெற்றிக்கு மறைமுகமாக உதவிடத் துடிக்கும் கோடரிக்காம்புகள்தான் அதிகம் ஆபத்தானவர்களாக இருக்கின்றனர். அதுபோன்ற கோடரிக் காம்புகளை எண்ணி, அவர்களுக்கு ஊடகங்களில் கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை எண்ணி, ஒரு வேளை, மக்கள் அவர்கள் பக்கம் செல்வார்களா? என்ற அய்யப்பாட்டோடு இளம்தலைமுறை ஊடகவியலாளர்கள் நம் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து கேள்வி எழுப்பும் போது,  அவர் தமது நீண்ட அனுபவத்தில் இருந்து, நட்சத்திரங்கள் ஒரு போதும் சூரியனை வீழ்த்த முடியாது என்று எடுத்துரைப்பார். அவரின் வாதத்தில் இருக்கும் அனுபவம், அவர் வார்த்தைகளில் வெளிப்படும் நம்பிக்கை என்னைப் போன்றோருக்கு தொடர்ந்து ஓடுவதற்கான உற்சாக மருந்து. பல நேரங்களில், குழப்பமான, சிக்கலான தருணங்களில், உச்ச நீதிமன்ற , உயர் நீதிமன்ற தீர்ப்புகள் வெளி வரும் சூழல்களில், என்ன மாதிரியான முடிவெடுப்பது என்ற குழப்பம் வருகின்றபோது, நான் நண்பர்களிடம் சொல்வதுண்டு. காத்திருங்கள், ஆசிரியர் வீரமணி அவர்கள் இதுகுறித்து நாளைக்கே அறிக்கை தருவார். அவர் இதில் என்ன முடிவெடுக்கிறாரோ, அதே முடிவை  நாமும் எடுப்போம். அதுவே சரியானதாக இருக்கும் என்று. ஆம் எங்களின் வழிகாட்டி…இனமான உணர்வுக்கு  – இந்தியாவுக்கே திசைகாட்டி அகவை 93இல் அடியெடுத்து வைக்கும் ஆசிரியர் வீரமணி அவர்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும். அவரால் இந்த சமூகம் மேம்பட வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *