பத்து வயதினில்
பற்று வைத்தாய்!
கற்ற கல்வியை
ஒப்படைத்தாய்!
மற்ற பற்றுகளை
உதறி விட்டாய்!
உற்ற தெல்லாம்
பெரியார் என்றாய்!
குற்றமிலாக் கொள்கையைப்
பற்றிக் கொண்டாய்!
பெற்ற பேறுதான்
என்னே, என்னே!
சுற்றுகின்றாய்
சுற்று கின்றாய்!
உலகப் பந்தை
சுற்று கின்றாய்!
பெரியாரை உலக மயம்
ஆக்கு கின்றாய்!
வெற்று உடலை
சுமக்க வில்லை!
வீணாய்ப் பொழுதைக்
கழிக்க வில்லை!
சற்றே சாய்ந்தும்
படுக்க வில்லை!
முற்றும் உன்வாழ்வு
பொது வாழ்வுக்கே!
மிச்ச மில்லை உம்மிடம்
கொடுப்பதற்கே!
தூசு படியாத
தொண்டறச் செம்மல் நீ!
உயர் எண்ணங்களின்
இலக்கணத் தேனீ !
பற்றுகிறோம் உம் பாதை
உயிர் உள்ளவரை!
பெரியார் உலகம்
உருவாவதற்கே
உந்தன் தோளுக்கே
உரம் கொடுப்போம்!
உயிரால் எழுதிய
உத்தரவாதம் இது!
பெற்றதம்மா இவ்வுலகம்
வீரமணியை!
உற்ற அறிவியல்
உதவட்டும்!
சற்றும் குறையாமல்
மேலும் அரை நூற்றாண்டு
ஆசிரியர் பெருமான்
வாழ்வதற்கே!
