மதுரை புற நகர் மாவட்டம், மேலக்கோட்டை ஊராட்சி பெரியார் நாகம்மையார் நகரைச் சேர்ந்த, திராவிடர் கழகத்தின் முன்னோடி பெரியார் பெருந்தொண்டர் கு.பால்சாமி மறைந்தார்.
தந்தை பெரியார் மீதும், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மீதும் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தவர், கழகம் அறிவித்த பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று தமது பங்களிப்பை வழங்கியவர், கடைசியாக கடந்த 11/11/2025 இந்தியாக் கூட்டனி கட்சிகளின் சார்பாக எஸ்.அய்.ஆர். எனும் தீவிர வாக்காளர் திருத்தம் மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து, மதுரை புறநகர் மாவட்டம், திருமங்கலம் சந்தைத் திடலில் கழகக் கொடியுடன் வந்து கலந்து கொண்டார், அவரின் இறுதி நிகழ்வு 29/11/2025 மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக அவருக்கு வீர வணக்கத்தையும் அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை கழகத் தோழர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
– – – – –
தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் நகர கழகச் செயலாளர் தோழர் ச.மனோகரன் 28.11.2025 அன்று இரவு 9 மணிக்கு மறைவுற்றார். அவரது உடல் 29.11.2026 பகல் 2.00 மணியளவில் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குஉடற் கொடையாக வழங்கப்பட்டது.
தேனி மருத்துவக் கல்லூரிக்கு கழகத் தோழர்கள் குருதிக்கொடை மற்றும் விழிக்கொடை வழங்கி வருவதுடன் இதுவரை 15 க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் உடல்கொடை வழங்கி யுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கழகத் தோழர் சா. மனோகரன் உடலுக்கு கழக தோழர்கள் இரங்கல் உரையுடன் வீரவணக்கம் முழங்க இறுதி மரியாதை செய்தனர்.
