
பாஜக + ஜனதா தள் கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களுக்கு வாக்களிக்காத பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை, ஆக்கிரமிப்புகள் என்று கூறி தொடர்ந்து இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேசம் மத்தியப் பிரதேசத்தில் பெரும்பாலும் இஸ்லாமியர்களின் குடியிருப்பைப் பதம் பார்த்த புல்டோசர் பீகாரில் எதிர்க்கட்சி ஆதரவாளர்களாக உள்ள ஹிந்துக்களின் குடியிருப்புகளையும் பதம் பார்க்கிறார்கள்.
பீகார் மாநில துணை முதலமைச்சர் பா.ஜ.க.வின் சாம்ராட் சவுதிரி பொதுமேடையிலேயே கூறினார்.
‘‘எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் அத்தனைப் பேரும் குளிரில், நடு ரோட்டில் தான் தூங்குவீர்கள்’’ என்று!
அதே போல் பா.ஜ.க. அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுவிட்டது. அதனால், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்களின் வீடுகளைத் தேர்தலுக்கு முன்பு அச்சுறுத்தியபடி இடிக்க ஆரம்பித்துவிட்டனர். புல்டோசர் தனது வேலையைத் துவங்கிவிட்டது.
