காரைக்குடி, சிவகங்கை கழக மாவட்டங்கள் சார்பாக ‘பெரியார் உலக’ நிதி ரூ.15,09,748/- வழங்கப்பட்டது!
மனுதர்மம் இப்போது மறைமுகமாக ஆட்சியில் இருக்கிறது;
வெளிப்படையாக ஆட்சியில் அமரத் துடித்துக்கொண்டிருக்கிறது!
மனுதர்மம் இப்போது மறைமுகமாக ஆட்சியில் இருக்கிறது;
வெளிப்படையாக ஆட்சியில் அமரத் துடித்துக்கொண்டிருக்கிறது!
காரைக்குடியில் கொட்டும் மழையில் கழகத் தலைவர் ஆசிரியர் சூறாவளிப் பிரச்சார பயண உரை

- காரைக்குடி, சிவகங்கை கழக மாவட்டங்கள் சார்பாக ‘பெரியார் உலக’ நிதி ரூ.15,09,748/- வழங்கப்பட்டது! மனுதர்மம் இப்போது மறைமுகமாக ஆட்சியில் இருக்கிறது; வெளிப்படையாக ஆட்சியில் அமரத் துடித்துக்கொண்டிருக்கிறது!
- காரைக்குடியில் கொட்டும் மழையில் கழகத் தலைவர் ஆசிரியர் சூறாவளிப் பிரச்சார பயண உரை
- காரைக்குடி, சிவகங்கை கழக மாவட்டங்கள் சார்பில்…
- கழகத் தலைவர் உரை
- “சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே!”
- மனுதர்மம் இப்போது அரியணையில் மறைமுகமாக இருக்கிறது!
- மக்களின் மானவாழ்வுக்காக பாடுபட்டட திராவிடர் இயக்கம்!
- ‘திராவிட மாடல்’ ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது!
- பங்கேற்றோர்
காரைக்குடி, நவ.30 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உள்ள, இறையாண்மை, சமத்துவம், சம தர்மம், ஜனநாயகம், குடியரசு ஆகியவை இன்றைய ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் எதுவுமே மக்களுக்கானதாக இல்லை என்ற அதி முக்கியமான கருத்தை, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
28.11.2025 அன்று மாலை 6 மணியளவில், காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் தேர்தல் பரப்புரை தொடர் கூட்டமும், பெரியார் உலக’ நிதியளிப்பு விழா இரண்டும் ஒன்றாகக் காரைக்குடிக் கழக மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை தலைமையேற்று உரையாற்றினார். செயலாளர் சி.செல்வமணி அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், துணைச் செயலாளர் இ.ப.பழனிவேல், மாநகரத் தலைவர் ந.ஜெகதீசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் செல்வம் முடியரசன் ஆகியோர் முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தனர். தி.மு.க. மாநில இலக்கிய அணி புரவலர் மேனாள் அமைச்சர் மு.தென்னவன் பங்கேற்று உரையாற்றினார். தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சரு.அசோகன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பசும்பொன் மனோகரன், சி.பி.அய்.நிர்வாகி பழ.ராமச்சந்திரன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் இளைய கவுதமன், முனைவர் ஆறு.அழகப்பன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலகர் சங்க நிறுவனர் இரா.போசு ஆகியோர் முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தனர்.
காரைக்குடி, சிவகங்கை
கழக மாவட்டங்கள் சார்பில்…
கழக மாவட்டங்கள் சார்பில்…
அதைத் தொடர்ந்து ‘பெரியார் உலக’ நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை கொடையாளர்கள் பெயர்களையும், தொகை யையும் வாசித்தார். உரியவர்கள் மேடைக்கு வந்து கழகத் தலைவரிடம் காசோலைகளை மனமுவந்து வழங்கி மகிழ்ந்தனர். காரைக்குடி மாவட்டம் சார்பாக ரூ.10,76,748/- சிவகங்கை மாவட்டம் சார்பாக ரூபாய் 4,33,000/- என, மொத்தம் ரூ.15,09,748/- வழங்கினர். கழகத்தலைவருக்கு மாவட்டக் கழகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. கழகத் தலைவர் மாவட்ட கழகத் தோழர்களுக்கு மரியாதை செய்தார். நிதி திரட்டல் குழுவினர் அனைவரும் ஆசிரியருடன் குழு படம் எடுத்துக்கொண்டனர். மேடை ஒருங்கி ணைப்பை என்னாரெசு பிராட்லா நிர்வகித்தார். நிதி வழங்கிய அனைவருக்கும் கழகத் தலைவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். அமைச்சர் பெரியகருப்பன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.
கழகத் தலைவர் உரை
நிறைவாகக் கழகத் தலைவர் உரையாற்றினார். அவர் தமது உரையில், “நான்கு தலைமுறைகளாகத் தொடரும் கொள்கைக் குடும்பம் என்.ஆர்.சாமி குடும்பம்” என்றார். தந்தை பெரியார் – தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோர் இடையே நடைபெற்ற, பொதுத் தொண்டு செய்பவர்களுக்குக் காலம், நேரம் முக்கியமில்லை என்பதை எண்பிக்கும் ஒரு முக்கியமான குறள் தொடர்பான உரையாடலை, நிகழ்ச்சியின் முக்கியத்துவம் கருதி எடுத்துரைத்தார். அதையொட்டி பலரும் பேசியதால், தந்தை பெரியாருக்குப் பிடித்த திருக்குறள்; அதன் பொருள்; ஆகவே, தானும் காலம், நேரம் பார்க்காமல் சுற்றுப்பயணம் செய்து மக்களை விழிப்பு ணர்வூட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற கருத்தில் பேசினார்.
“சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும்
கல்வியைக் கொடுக்காதே!”
கல்வியைக் கொடுக்காதே!”
தொடர்ந்து, “இந்தப் பயணம் – கடைசி ஜாதி வெறியன்; கடைசி மூடநம்பிக்கைக்காரன் இருக்கும் வரையில் எங்கள் பயணம் தொடரும்” என்று குறிப்பிட்டார். அந்தப் பயணத்தில் திராவிடர் இயக்கம் கண்ட வெற்றியைக் குறிப்பிட, “இந்த அரங்கத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் என்ன ஜாதி? என்ன மதம்? என்று தெரிந்துகொள்ளாமலேயே ஒன்றாக அமர்ந்திருக்கிறோமே. இதற்கு யார் காரணம்? என்று கேட்டு, “தந்தை பெரியார்!” என்று அழுத்தம் திருத்தமாக பெரியார் பெயரை உச்சரித்தார். இப்போது இப்படி மாறியிருக்கிறது. முன்பு எப்படி இருக்கிறது? என்பதையும் சொல்ல, “சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வி யைக் கொடுக்காதே” என்று மனுதர்மத்தில் எழுதி வைத்திருந்தபடிதான் நடந்துகொண்டு இருந்தது. திராவிடர் இயக்கத்தால்; தந்தை பெரியாரால் இந்த மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. மறுபடியும் பழைய நிலைமைக்கு நம்மைக் கொண்டு செல்லத்தான் ஸநாதனிகள் துடித்துக்கொண்டிருக்கின்றனர் என்று வரவிருக்கும் ஆபத்தைச் சுட்டிக்காட்டினார்.
மனுதர்மம் இப்போது அரியணையில் மறைமுகமாக இருக்கிறது!
அப்படி கொண்டு வரத்துடித்துக் கொண்டிருப்பது ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் அரசுதான்; ஆர்.எஸ்.எஸ்.தான் என்பதைச் சுட்டிக்காட்டினார். அதனுடைய முன்னோட்டமாக அமலில் இருக்கும் ஓர் ஆபத்தான போக்கைச் சுட்டிக்காட்டினார். அதாவது, அரசியலமைப்புச் சட்டத்தின் பீடிகையில் இறையாண்மை, சமத்துவம், சமதர்மம், ஜனநாயகம், குடியரசு ஆகிய அய்ந்து அம்சங்கள் இருக்கின்றன. அந்த அய்ந்தில் ஒன்றேனும் மக்களுக்கானதாக இன்றைக்கு இருக்கின்றதா? என்றொரு அதிமுக்கியமான கேள்வியை எழுப்பி, ”மனுதர்மம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தீர்மானமே போடுகிறார்கள்; மனுதர்மம் இப்போது அரியணையில் மறைமுகமாக இருக்கிறது; வெளிப்படையாக செயல்பட துடித்துக்கொண்டுள்ளது” என்றும் பதிலளித்தார்.
மக்களின் மானவாழ்வுக்காக
பாடுபட்டட திராவிடர் இயக்கம்!
பாடுபட்டட திராவிடர் இயக்கம்!
தொடர்ந்து, இந்த மண் சுயமரியாதைத் திருமணத்திற்கு வித்திட்ட மண் என்று 1934 இல் பெரியார் தலைமையில் நடைபெற்ற ஒரு இளம் கைம்பெண்ணின் திருமணம் பற்றியும், 4 குழந்தைகள் பிறந்தபின் தேவகோட்டையில் வழக்கு தொடுக்கப்பட்டு, சப்தபதி வைக்காததால் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்ட வரலாற்றைச் சுட்டிக்காட்டினார். சுயமரியாதைத் திருமணத்தை உருவாக்கியவர் பெரியார்; அதற்கு சட்ட வடிவம் கொடுத்தவர் அண்ணா; அதன் பிறகுதான் அம்முறையில் திருமணம் செய்தவர்களின் பிள்ளைகள் வைப்பாட்டி மக்கள் எனும் அவமானத்திலிருந்து விடுபட்டனர் என்றும் கூறி, திராவிடர் இயக்கம் மக்களின் மானவாழ்வுக்காக எப்படியெல்லாம் பாடுபட்டிருக்கிறது என்று விவரித்தார்.
‘திராவிட மாடல்’ ஆட்சியை
யாராலும் அசைக்க முடியாது!
யாராலும் அசைக்க முடியாது!
இப்படிப்பட்ட திராவிடர் இயக்கத்தைத்தான் சிலர் சாதாரணமாக வீழ்த்திவிடலாம் என்று கருதுகின்றனர் என்ப தைச் சுட்டிக்காட்ட, “மின்சாரத்துடன் மின்மினிப்பூச்சிகள் போட்டி போட வருகிறார்கள்” என்று நாகரிகமாகக் குறிப்பிட்டுவிட்டு, வெளிப்படையாக, “மக்களை சந்தித்து வாக்கு பெற இயலாதவர்கள் ஓட்டுக்களைத் திருடுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். பின்னர், அரசியலில் ஆள்பிடிப்பவர்களை சுட்டிக்காட்ட, “எந்த கும்கிகள் வந்தாலும் இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. ஏனெனில் இந்த ஆட்சியைக் காப்பாற்றத்தான் நாங்கள் இருக்கிறோம். அதற்காகத்தான் இந்தப் பிரச்சாரம். திராவிடமே வெல்லும் – தி.மு.க. ஆட்சியே மீண்டும் வரும்” என்று கூறி தமதுரையை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
பொதுக்குழு உறுப்பினர்கள் தி.ஜெயலட்சுமி, ஆ.சுப்பையா, சாமி.திராவிடச்செல்வம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட ஆலோசகர் சு.முழுமதி, கல்லல் ஒன்றிய அமைப்பாளர் கி.சங்குநாதன், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றி யத் தலைவர் ம.முத்தழகு, காளையார்கோயில் ஒன்றியத் தலைவர் து.அழகர்சாமி, திராவிடர் தொழிலாளர் கழகத் தலைவர் சி.சூரியமூர்த்தி, செயலாளர் சொ.சேகர், தேவ கோட்டை நகரத் தலைவர் வீ.முருகப்பன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைத் தலைவர் அ.அரவரசன், மாநகரத் துணைத் தலைவர் ஆ.பழனிவேல்ராசன், மகளிரணி அமைப்பாளர் இள.நதியா, ப.க. மாவட்ட துணைச் செயலாளர் இரா.முத்துலட்சுமி, காளையார்கோயில் ஒன்றியச் செயலாளர் பா.ராஜ்குமார், தி.புருனோ என்னாரெசு, பெரியார் பெருந்தொண்டர் ச.கைவல்யம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
