தஞ்சை,மே 7– தஞ்சையில் பெரியார் பேசுகிறார் தொடர் – 75 (பவள விழா) சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்துகொண்டு சிறப் புரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 4.5.2023 வியாழன் மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், அன்னை மணியம்மை யார் நூற்றாண்டு அரங்கத்தில் அண்ணல் அம்பேத்கர் 133 ஆவது பிறந்தநாள் விழா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 133 ஆவது பிறந்த நாள் விழா, வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா சிறப்புக்கூட்டம் பெரியார் பேசுகிறார்-தொடர் 75 ஆவது நிகழ்வாக நடை பெற்றது.
இந்நிகழ்வில் தஞ்சை மாநகர அமைப்பாளர் செ.தமிழ்செல்வன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் கோபு.பழனிவேல் பெரியார் பேசுகிறார் தொடரை விளக்கி உரையாற்றினார். கழக தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன் தலைமையேற்று உரையாற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார் தொடக்க வுரையாற்றினார்.
உரத்தநாடு புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ந.பாவேந்தி புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் படத்தினை திறந்துவைத்து உரையாற்றி னார். தஞ்சாவூர் அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் துரை.தியாகராசன் அண்ணல் அம்பேத்கர் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார்.
திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் “நூற்றாண்டு காணும் வைக்கம் போராட்டம்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக மாநகர ப.க. செயலாளர் மா.இலக்குமணசாமி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வின் தொடக்கத்தில் மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் கொள்கை விளக்க பாடல்களை பாடினார். மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட ப.க. அமைப்பாளர் குழந்தை கவுதமன், நெய்வேலி ஞானசேகரன், திருவை யாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மாநில ப.க. ஊடக பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் அதிரடி க.அன் பழகன், மாநில இளைஞரணி துணை செய லாளர் இரா.வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப் பட்டு இராமலிங்கம், மாவட்ட ப.க. துணை தலைவர் பெரியார்கண்ணன், மாநகர இளை ஞரணி துணை தலைவர் அ.பெரியார் செல்வம், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் ந.சங்கர், கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், மாநகர மகளிரணி செயலாளர் சாந்தி பழனிவேல், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், கலைமணி, உரத்த நாடு நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணை செய லாளர் ந.எழிலரசன், மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் இரா.சரவணக்குமார், மன்னை சித்து, தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.வீரக்குமார், பகுத்தறிவாளர் கழக தோழர்கள் க.கரு ணாமூர்த்தி, தங்க.வெற்றிவேந்தன், மன்றோ மதியழகன், கென்னடி, பெரியார் படிப்பக வாசகர்கள் கு.முருகானந்தம், குழந்தைசாமி, ஏ.வி.என்.குணசேகரன், புண்ணிய மூர்த்தி, இளங்கோவன், திருவோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர் நாகநாதன், மாணவர் கழக தோழர்கள் அ.அறிவாசான், யாழினி, வழக் குரைஞர் லெட்சுமணன், சி.அபிராமி மற்றும் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் ஏராள மானோர் கலந்துகொண்டனர்.