டேராடூன், மே 7 – பிரதமர் மோடியின் மனதின் குரல் (மன் கி பாத்) 100-ஆவது நிகழ்ச்சி கடந்த 30.4.2023 அன்று நடந்தது.
இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உத்தர காண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் பங்கு பெற்றனர். அதே நேரம் இந்த நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அல்லது மருத்துவ சான்றிதழை சமர்ப் பிக்க வேண்டும் என டேராடூனின் ஜி.ஆர்.டி. நிரஞ்சன் பூர் அகடாமியால் உத்தர விடப்பட்டதாக குற்றச்சாட் டுகள் எழுந்தது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் வாட்ஸ்-அப் குரூப்பில் வந்த உத்தரவின் ஸ்கிரின்ஷாட்டை காட்டி பெற்றோர் புகார் செய்தனர். இது தொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் உரிமைக்கான தேசிய சங்கத்தில் தேசிய தலைவர் ஆரிப்கான் டேராடூன் முதன்மை கல்வி அதி காரிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.