தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: தடகளம், பாட்மின்டன், நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், டேபிள் டென்னிஸ், பளு தூக்குதல், குத்துச்சண்டை, ஆக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில் லெவல் 4 & 5 பிரிவில் 5, லெவல் 2 & 3 பிரிவில் 16, லெவல் 1 பிரிவில் 46 என மொத்தம் 67 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: லெவல் 1 பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அய்.டி.அய்., லெவல் 2 & 3 பணிக்கு பிளஸ் 2, லெவல் 4 & 5 பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.1.2024 அடிப்படையில் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விளையாட்டு தகுதி: தேசிய, பன்னாட்டு போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கடைசி நாள்: 27.11.2023
விவரங்களுக்கு: iroams.com