வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மம்தா கட்சிக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது

1 Min Read

டில்லி, நவ.27 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்கத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்த நிலையில், சந்திப்பை நேரலை செய்யக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது.

மேற்குவங்கத்தில் தற்போது நடை பெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் (எஸ்அய்ஆர்) பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகத் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வரு கிறது. இதனை ‘சத்தமில்லாத கண்ணுக்குத் தெரியாத மோசடி’ என்று வர்ணித்துள்ள அக்கட்சி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் திடீர் தொடர் மரணங்கள் குறித்தும் கவலை தெரிவித்து வந்தது. இதுதொடர்பாகப் புகாரளிக்கத் தங்கள் கட்சிக் குழுவைச் சந்திக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்,  நாளை (28.11.2025) காலை 11 மணிக்கு டில்லியில் உள்ள நிர்வாச்சன் சதனில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இச்சந்திப்பில் 5 பேர் கொண்ட குழு மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பட்டியலைத் திரிணாமுல் காங்கிரஸ் பிடிவாதமாக அனுப்பி யுள்ளது. இதற்கிடையே, ‘எங்கள் கேள்விகளுக்குப் பொதுவெளியில் விடை கிடைக்க வேண்டும்; தேர்தல் ஆணையம் தனது வெளிப்படைத் தன்மையை நிரூபிக்க இச்சந்திப்பைத் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்’ என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி சவால் விடுத்துள்ளார். ஆனால், இந்தக் கோரிக்கையைத் தேர்தல் ஆணை யம் ஏற்கவில்லை என்றும், வழக்க மான நடைமுறைப்படியே மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை நடை பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *