காஞ்சிபுரம், நவ. 27- காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 16.11. 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி அளவில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள, ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் நலச்சங்க அலுவலகத்தில் கடவுள் மறுப்புடன் தொடங்கியது.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமை ஏற்றார்.
கூட்டத்திற்கு வந்த அனைவரையும் காஞ்சிபுரம் மாவட்ட கழக இணைச் செயலாளர் ஆ.மோகன் வரவேற்றார்.
கலந்துரையாடல் கூட்டத்தில், மாவட்டக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் கணக்கு வழக்குகள் தாக்கல் செய்தும் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி உரையாற்றினார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் பு. எல்லப்பன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. அருண்குமார், மாவட்டக் காப்பாளர் ச. வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர் வீ. பன்னீர்செல்வம், மாநில பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா. கதிரவன் ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினர்.
திராவிடர் கழக மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மகளிரணி துணைச் செயலாளர் பெரியார் செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா.இளம்பரிதி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் அ. ரேவதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ. கோவிந்தராஜி,
மாவட்ட மாணவர் கழக அமைப் பாளர் அ. அருண்குமார், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் போளூர் சு. பன்னீர் செல்வம், பகுத்தறிவாளர் கழகத் தோழர் பல்லவர்மேடு க. சேகர் ஆகியோர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் அ.வெ.சிறீதர், கழகத் தோழர் இ. ரவிந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்:
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை சிறப்பாக நடத்திய கழகத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
23.12.2025 அன்று காஞ்சிபுரம் வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து கூட்டத்தைச் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ஒரு கோடியே எழுபது லட்சம் ரூபாய் வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் நாடாளு மன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு பத்து லட்ச ருபாய் நன்கொடை திரட்டித்தருவதென தீர்மானிக்கப்பட்டது.
திராவிட மாடல் ஆட்சி தொடர மாவட்டம் முழுதும் முழுவீச்சில் பிரச்சாரம் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்ட மாநகர திராவிடர் கழகத் தலைவர் ந.சிதம்பரநாதன் தலைமையில் குழுவாக செயல்படுவதென தீர்மானிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட கழக மகளிரணித் தலைவராக ர. உஷா வும் செயலாளராக ஜானகியும் நியமிக் கப்பட்டனர்.
மகளிர் பாசறை தலைவராக அ. ரேவதியும் செயலாளராக மருத்துவர் குழலரசியும் நியமிக்கப்பட்டனர்.
மாவட்ட கழகச் செயலாளர் கி. இளையவேள் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவடைந்தது.
