தஞ்சாவூர், மே 7 – “தமிழ் நாட்டில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர் களுடன் விரைவில் ஆலோ சனை செய்யப் படவுள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித் தார்.
தஞ்சாவூரில் தியாகிகள் வாட்டாக்குடி இரணியன், சிவராமன், ஆறுமுகம், என்.வெங்கடா ஜலம் ஆகியோரின் வரலாறு குறித்த ஆவணப் பட வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்நாடு ஆளுநர் போகிற போக்கில் பல உண்மை களுக்கு மாறான செய்திகளை வெளியிட்டுள்ளார்.
சட்ட வரம்புகளுக்கு உள்பட்டுதான் ஆளுநர் செயல் பட முடியும். ஆனால், நம்முடைய ஆளுநர் அந்த வரம்புகளை எல்லாம் மீறி, அரசியல்வாதியைப் போன்று, ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிமட்ட தொண் டனைப் போல பேசுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆளுநர் உரை என்பது அவர்கள் எழுதிக் கொடுப் பதை எல்லாம் படிக்க முடியாது என்றும், அதில் பல பொய்யையும், புரட்டுகளையும், விளம்பரத்துக்காகவும் எழுதியுள்ளனர் எனவும், அதையெல்லாம் நான் படிக்க முடியாது என்றும் ஆளுநர் கூறியுள்ளார். ஆனால், அமைச்சரவையின் கூட்டு முடிவின்படி எழுதப்பட்ட உரையைத்தான் படிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. எனவே, அந்த உரையை மாற்று வதற்கோ, திருத்துவதற்கோ, படிக்க மறுப்பதற்கோ உரிமையில்லை என சட்டம் தெளி வாகச் சொல்கிறது. ஆனால், இதையெல்லாம் மீறி ஆளுநர், தான் சொல் வதுதான் சட்டம் என்பது போன்று பேசி வருகிறார்.
தன்னிடம் எந்தவிதமான மசோதாக்களும் நிலுவையில் இல்லை என ஆளுநர் கூறுகிறார். ஆனால், ஆளுநரிடம் 17 மசோதாக்கள் கிடப்பில் ஒப்புதல் இல்லாமல் காத்துக் கிடக்கின்றன என தமிழ் நாட்டுத் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்” என்றார்.