ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்வதாக அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாசிங்டன், நவ. 26- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோனில் பேசியதாக தெரிவித்துள்ளார். அப்போது ஜி ஜின்பிங் சீனாவுக்கு வர அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்ல இருப்பதாகவும், தனது அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வருடம் இறுதியில் அமெரிக்க வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது என சமூக வலைத்தளத்தில் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

இருவரும் உக்ரைன், அமெ ரிக்க சோயாபீன்ஸ் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக கூறப் படுகிறது.

வரி விதிப்பு காரணமாக அமெரிக்கா- சீனா இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தென்கொரியாவில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.

தைவான் குறித்து ஜப்பான் கருத்து தெரிவித்ததால் சீனா- ஜப்பான் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தைவான் குறித்து டொனால்டு டிரம்ப் குறிப்பிடவில்லை.

சுயாட்சி பெற்ற தைவான் சீன ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தைவான் குறித்து யாரும் கருத்து தெரிவித்தால் அதற்கு கடும் கண்டனமும் தெரி வித்து வருகிறது.

தைவானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான ஜப்பானின் ராணுவம் இதில் ஈடுபடக்கூடும் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி குறிப்பிட்டிருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *