திராவிடக் கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டு செல்வோம்! தி.மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சூளுரை

Viduthalai
3 Min Read

அரசு, தமிழ்நாடு

பல்லாவரம், மே 8–  தமிழ்நாட்டை முன்னேற்றிய திராவிடவியல் கோட் பாட்டை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்போம் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட் டம் சார்பில், திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் பல்லாவரத்தில் நேற்று (7.5.2023) நடை பெற்றது. காஞ்சிபுரம் வடக்கு மாவட் டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் த.துரைசாமி, துணைச் செய லாளர்கள் இ.கருணாநிதி சட்டமன்ற உறுப்பினர், வரலட்சுமி சட்டமன்ற உறுப்பினர், து.மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் வெ.விசுவநாதன் முன்னிலை வகித்தனர்.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது: 

தமிழ்நாட்டில் 6ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள தி.மு.க. அரசு, தற்போது 2ஆம் ஆண்டை நிறைவுசெய்து, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பாழ்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டை மீட்டது உதய சூரியன் ஆட்சி. திராவிடம் யாரையும் பிரிக்காது; அனைவரையும் அரவ ணைக்கும்.

திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தைக் காலாவதியாக்கியதுதான் திராவிடம். வர்ணாசிரமத்தை காலாவதியாக்கியது திராவிடம். ஆரியப் படையெடுப்புகளை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம். எனவேதான், அதைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார்.

தனிப்பட்ட நட்புக்காக நான் கொள் கையை விட்டுக்கொடுக்க மாட்டேன். கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்பேன். ஆளுநர் உடனான எனது தனிப்பட்ட நட்பு வேறு; எங்களது கொள்கை வேறு. மிசா, பொடா,தடா உள்ளிட்டவற்றை எல்லாம் நாங்கள் பார்த்தவர்கள்.

தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் மூலமாக ஒரு கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்து 355 பேர் பயனடைந்துள்ளனர். நாங்கள் சொன் னதைச் செய்ததால்தான் கடந்த 2 ஆண்டு களில் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளோம்.

இன்னும் சொல்லப்போனால், சொல்லாததையும் செய்திருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில், சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலம் அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந் துள்ளனர்.

தமிழ்நாடு அமைதிப் பூங்கா வாக இல்லை என்று ஆளுநர் கூறியிருக் கிறார். பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் மாநி லம் பற்றி எரிகிறதே, அதுபோல தமிழ் நாடு பற்றி எரிகிறதா? கோவையில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில், சில மணி நேரத்தில் நடவடிக்கை மேற் கொண்டோம். குற்றவாளிகளைக் கைது செய்தோம்.

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறைச் சம்பவத்தில் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து,துப்பாக்கிச் சூடு இல்லாமல் வன்முறையைக் கட்டுப் படுத்தியது காவல் துறை. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தால், அதையும் ஆளு நர் குறையாகச் சொல்வார்.

சிதம்பரத்தில் நடந்த குழந்தைத் திருமணங்கள் தொடர்பான வழக்கை முன்வைத்து, தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஒரு கடிதம் அனுப்பினார். அவருக்கு அப்போதே பதில் கடிதம் அனுப்பிவிட்டோம்.

மதுரையில் அமையும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தமிழ், ஆங்கில நூல்கள்தான் வாங்குகிறோம். இந்தி யாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளின் புத்தகங்களையும் வாங்க வேண்டுமாம். குஜராத் மாநில நூலகத் தில் தமிழ்ப் புத்தகங்களை வைப்பார் களா? நாகாலாந்தில் ஆர்.என்.ரவி ஆளுநராக இருந்தாரே, அங்குள்ள நூலகத்தில் அனைத்து மொழிப் புத்த கங்களையும் வைக்குமாறு வலியுறுத் தினாரா?

தமிழ்நாட்டை முன்னேற்றிய திரா விடவியல் கோட்பாட்டை, இந்தியா முழுவதும் கொண்டு சேர்ப்போம். ஒன் றிய அளவில் ஒற்றுமையை உருவாக்கி, உன்னதமான அரசை தலைநகர் டில்லியிலும் அமைப்போம். அதற்கான மக்களவைத் தேர்தல் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதற்கு நாம் தயாராவோம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், தி.மு.க. பொருளாளர் மக்களவை உறுப்பினர் 

டி.ஆர்.பாலு மக்களவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை தீர்மானக் குழுச் செயலாளர் மீ.அ.வைத்தியலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எழிலரசன், பம்மல் தெற்கு பகுதி செயலாளர் வே.கருணாநிதி, பல்லா வரம் மண்டலக் குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை ஆர்.மனோகரன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், சிறீ பெரும்புதூர் தெற்கு ஒன்றியப் பொரு ளாளர் எறையூர் பா.பரமசிவம், ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் மல்லிகா ரவிச்சந்திரன், கோமதி கணேஷ்பாபு மற்றும் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பி னர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற் றனர். முன்னதாக, மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு வெள்ளி செங்கோல் பரிசாக அளிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *