புதுடில்லி, நவ.25 காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு டாலருக்கான ரூபாய் மதிப்பு 90 ரூபாயை கடக்கப்போகிறது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது என்ன பேசினீர்கள் என்பது பிரத மர் மோடிக்கு நினைவு இருக்கிறதா? “ரூபாய் மதிப்பு எவ்வளவு வேகமாக வீழ்ச்சியடைகிறது என்று பாருங்கள். யாருடைய கவுரவம் வேகமாக இறங்குகிறது என்பதில் ரூபாய்க்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே போட்டி நடப்பது போல் தோன்றுகிறது” என்று அப்போது மோடி பேசினார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதான் மனித நேயம்!
ஓய்வு கால பணத்தை கொண்டு பயனாளிகளுக்கு பால், ரொட்டி வழங்கும் ஆசிரியர்
நகரி, நவ.25- தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் மந்தனி என்னும் பகுதியை சேர்ந்தவர் வசந்த சர்மா (வயது 81). தெலுங்கு மொழி ஆசிரியராக பணியாற்றி கடந்த 2002-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டோமே என்று அவர்ஓர் இடத்தில் முடங்கிக்கிடக்கவில்லை.
ஓய்வுக்கே ஓய்வு கொடுத்துவிட்டு, தனது பணி ஓய்வு காலத்தின் முதல் நாளன்றே, தனது வீட்டிற்கு அருகில் உள்ள மந்தனி அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள மருத்துவ பயனாளர்களுக்கு தினமும் அவர் பால் மற்றும் பிஸ்கட்டுகளை இலவசமாக வழங்கி வருகிறார்.
தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்த சேவையை செய்து வருகிறார். தனது இந்த சேவைக்கு செலவாகும் பணத்தை, தனது ஓய்வூதியத்தில் இருந்து மாதம் ரூ.20 ஆயிரம் வரை ஒதுக்கி விடுகிறார்.
தான் எத்தனையோ பேருக்கு கல்வியை போதித்த போது பிள்ளைகள் நன்றாக படித்து முன்னேறுவதை பார்த்து எவ்வளவு ஆனந்தம் ஏற்பட்டதோ அதை விட பெரிய ஆனந்தம் இந்த சேவை மூலம் தனக்கு கிடைப்பதாக வசந்த சர்மா தெரிவித்தார்.
காலையும் மாலையும் மருத்துவ பயனாளர் முதியவரின் வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இதுவரை அவர் ஒரு நாள் கூட தனது இந்த சேவையை நிறுத்தியது இல்லை என்று மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
29ஆம் தேதி சென்னைக்குக் கன மழை எச்சரிக்கை
வானிலை ஆய்வு மய்யம்

சென்னை, நவ.25 அடுத்த 7 நாட் களுக்கான வானிலை அறிக்கை குறித்து வானிலை மய்ய இயக்குநர் அமுதா பேட்டி அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
குமரி கடல் பகுதியில் உள்ள சுழற்சியால் நமக்கு மழை கிடைக்க அதிக வாய்ப்பு.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 29ஆம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங் களுக்கு நாளை (26.11.2025) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.
டிசம்பர் மாதத்தில் எந்த அளவுக்கு மழை இருக்கும் என நவம்பர் 30-இல் அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
