சென்னை, நவ. 25- தென் சென்னை மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 22.11.2025 அன்று மாலை 6 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ. ஆட்டோ ஒர்க்ஸ் அருகில், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்த சாரதி முன்னிலையிலும் நடை பெற்றது. மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் கடவுள் மறுப்பு கூறினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் பெரியார் உலகம் நிதி திரட்டுதல், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், தமிழர் தலைவர் ஆசிரியரின் 93ஆவது பிறந்த நாளை(டிசம்பர்- 2) சிறப்பாக கொண்டாடுதல் குறித்து நோக்க உரையாற்றினார்.
நோக்க உரையின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை, அரும்பாக்கம் சா. தாமோதரன், மயிலை சோ.பாலு, எம்.டி. சி. சு.செல்வம், வெ.கண்ணன், இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து, மந்தைவெளி எ. பன்னீர்செல்வம், தரமணி ம.ராஜு ஆகியோர் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவியருவி ஈரோடு தமிழன் பன், தாம்பரம் பெரியார் பெருந் தொண்டர் தி.இரா.ரத்தினசாமி, அவரது இணையர் ர.ஆதிலட்சுமி மற்றும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை ந.கிருஷ்ணன் ஆகியோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
‘பெரியார் உலகம்’ கட்டுமான நிதிக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல் செய்து தருவதென ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது ஆண்டு (டிசம்பர்-2) பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்துவது எனவும்,
கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்து வழங்குதல் மற்றும் கழகப் பரப்புரைப் பணிகளை தீவிரப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் உலகம் நிதி திரட்டுவதற் காக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நிறைவாக இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு நன்றி கூறினார்.
