அலிகார், நவ.25 பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் நகரில் உள்ள 4 இந்து கோயில் சுவர்களில், கடந்த அக்டோபர் 25 அன்று “அய் லவ் முகமது ” என்று எழுதப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுக்க பெரும் கலவரம் மூண்டது.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஹிந்துத்துவா ஆதரவு அமைப்புகள், இச்செயலைக் கண்டித்து போராட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டன. இதற்குக் காரணமான முஸ்லிம்க ளைக் கைது செய்ய வேண்டும் என சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, முதல் கட்ட விசாரணை மேற்கொண்ட காவல்துறை, அப்பகுதியில் இமாம் மவ்லவி முஸ்தக்கீம், குல் முஹம்மது, சுலைமான், அல்லா பக்ஷ், ஹஸன், ஹமீத், சோனு, யூஸுப் உள்ளிட்ட 8 இஸ்லாமியர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
இதனால், சங் பரிவாரங்கள் வன்முறையைக் கைவிட்டனர்.
காட்டிக் கொடுத்த
எழுத்துப் பிழை!
ஆனால், அலிகாரின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) நீரஜ் குமார் ஜேடனுக்கு, இக்கைது தொடர்பான நெருடல் தொடர்ந்தது. தொடர் விசாரணையை முடுக்கி விட்டார். கோயில் சுவர்களில், முஹம்மது என்பது ஆங்கிலத்தில் “MUHMAD” என தவறாக எழுதப் பட்டிருந்ததே காரணம். பொதுவாக முஸ்லிம்கள் தமது பதாகைகளில் சொல்லுக்குச் சரியான எழுத்து களைக் (ஸ்பெல்லிங்) கொண்டு எழுதுவது வழக்கம். கைது செய்யப்பட்டவர்களும் சரியான எழுத்துகளை எழுதக் கூடியவர்கள் என்பதை உறுதிப்படுத்தினார் நீரஜ்.
தொடர் விசாரணையில், பல்வேறு சாட்சிகள் மற்றும் கோயில்கள் இருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்த காவல்துறையினர் அதிர்ந்தனர். அதைத் தொடர்ந்து “அய் லவ் முஹம்மத்” என பல்வேறு கோயில்களின் சுவர்களில் எழுதி விட்டு பெரும் மதக்கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்ட சங் பரி வாரங்களைச் சேர்ந்த 5 இந்துக்கள் சிக்கினர். அவர்கள் அபிஷேக் சரஸ்வத், ஆகாஷ் சரஸ்வத், திலீப் குமார் சர்மா, ஜிஷாந்த் குமார் சிங், ராகுல் (தலை மறைவாகி உள்ளார்) ஆவர்.
வலுவான ஆதாரங்களுடன் உண்மைக் குற்றவாளிகள் பிடி பட்டதால், முன்னர் கைதான 8 இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
