பகுத்தறிவாளர் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவரும், திராவிட இயக்கச் சிந்தனையாளரும், கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மேனாள் அகில இந்திய தலைவருமான கொள்கைத் தோழர் தஞ்சை இரா.இரத்தினகிரி அவர்கள் (வயது 85) இன்று (24.11.2025) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
அவர் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரது வாழ்விணையர் திருமதி. நாடியம்மை, மகன் கார்க்கி, மகள் விடுதலைச் செல்வி ஆகியோருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புக்கு: 94435 87889
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
24.11.2025
குறிப்பு: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி மூலம் மறைந்த இரத்தினகிரியின் வாழ்விணையரிடமும், மகனிடமும் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார்.
