சென்னை, நவ. 8 – : 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கும் ஒன் றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக வருகிற நவம்பர் 15-ஆம் தேதி ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய பாஜக அரசு உரிய முக்கியத்துவம் வழங்குவ தில்லை. 2021-2022இல் ரூபாய் 98,468 கோடி ஒதுக்கிய நிலையில் 2023-2024 நிதியாண்டில் இத் திட்டத்துக்கு ரூபாய் 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்க்கப் பட்ட பட்ஜெட் மதிப்பீடான ரூபாய் 73 ஆயிரம் கோடியை விட 18 சதவீதம் குறைவாகவும், 2022-2023 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூபாய் 89 ஆயிரம் கோடி விட 33 சதவீதம் குறைவாகவும் இருந்தது.
இந்த நிதியாண்டில் 6 மாதங்களில் இந்த திட்டம் 6147 கோடி ரூபாய் தற்போது பற்றாக்குறையில் உள்ளது என்று இணையதளத்தில் ஒன் றிய அமைச்சகம் வெளியிட் டுள்ள புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன.
இந்த பற்றாக்குறையின் விளைவாக ஆண்டுக்கு சரா சரியாக வெறும்17 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத் துக்கு மோடி அரசு அநியாய மான முறையில் குறைவான அளவில் நிதி ஒதுக்கீடு செய் துள்ளது. இத்தகைய நடவடிக் கையானது கிராமப்புற தொழி லாளர்களின் உரிமைகள் மீதான கடுமையான தாக்குதலாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறு கின்றனர்.
100 நாட்களுக்கு அனைவ ருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் ரூபாய் 2.72 லட்சம் கோடி தேவை. ஆனால், தற்போது அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மாநில அரசுகளை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது.
தற்போது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 0.198 சதவீதம் தான். போது மான நிதியை வழங்குவதற்கு பதிலாக ஒன்றிய அரசு தொடர்ந்து தேவையற்ற நிபந் தனைகளை விதித்து தொழி லாளர்களுக்கான ஊதிய ஒதுக் கீட்டைக் குறைத்து, கட்டு மானப் பணிகளுக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
100 நாள் வேலைத் திட்டத் தின்படி வேலை கேட்பவர் களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும். அப்படி வேலை வழங்கவில்லை என்றால் அவர்களுக்கு நட்ட ஈடு கொடுக்க வேண்டுமென்று சட்டம் கூறுகிறது.
ஆனால், ஒன்றிய அரசு ஒதுக்குகிற நிதி சராசரியாக ஆண்டுக்கு 42 நாட்களுக்குத் தான் வேலை வழங்க முடியும். மீதியுள்ள நாட்களுக்கு வேலை வழங்குவதற்கான நிதி ஒதுக் கப்படவில்லை. டிசம்பர் 14, 2022 நிலவரப்படி தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு ரூபாய் 4700 கோடி நிதி வழங் காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இதன்மூலம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் கடந்த காலங்களில் ஏற்பட்ட பலன் களை சிதைத்து வருகிறது.
இத்தகைய கிராமப்புற தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடித்து, 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக் கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங் கிரஸ் சார்பாக அனைத்து வட் டாரங்களிலும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக வருகிற நவம்பர் 15ஆம் தேதி காலை 11 மணி யளவில் பெருந்திரளான காங் கிரஸ் கட்சியினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத் தும்படி கேட்டுக் கொள் கிறேன்.
100 நாள் வேலைத் திட்டம் என்பது வறுமையை ஒழிக்க காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்ததாகும். அதை மோடி ஆட்சி புறக்கணிப்பதை எடுத் துக் கூறும் வகையில் மக்களிடம் பரப்புரை மேற்கொள்ள தமிழ் நாடு காங்கிரஸ் தயாரித்த துண்டுப் பிரசுரத்தை கிராமப் புற மக்களிடையே விநியோ கிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.