சேலம், நவ.23 சேலத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.11 இலட்சத்திற்கும் மேலாக நிதி வழங்க சேலம் மாவட்டக் கழக நிர்வாகிகள் கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நூற்றாண்டு நினைவு நிறைவு மண்டபத்தில் நடைபெற்றது
மாவட்ட தலைவர் வீரமணி ராஜு தலைமையில் 18.11.2025 அன்று மாலை 5:30 மணிக்கு உற்சாகமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மூணாங்கரடு பெ. சரவணன் வரவேற்புரை ஆற்றினார். மேனாள் மாவட்டச் செயலாளர் சி. பூபதி கடவுள் மறுப்பு கூறினார்.
மாவட்ட ப.க. துணைத் தலைவர் பொறியாளர் சிவகுமார் மாவட்டத் துணைச் செயலாளர் அ.இ.தமிழர் தலைவர், ப.க. மாவட்டத் துணை செயலாளர் மோ. தங்கராஜ், மாநகர செயலாளர் ச.வெ.இராவணபூபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை. சக்திவேல், மேனாள் மாவட்டத் தலைவர் அ.ச. இளவழகன், மேனாள் மாவட்டச் செயலாளர் சி. பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மேட்டூர் கழக மாவட்டத் தலைவர் கா.நா.பாலு, ஆத்தூர் கழக மாவட்டத் தலைவர் அ.சுரேஷ் மேட்டூர் மாவட்டச் ப.க. தலைவர் கோவி. அன்புமதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் பங்கேற்று அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் உலகமயமாவது குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அரும்பெரும் தொண்டினை குறித்தும் ஒவ்வொரு தோழரும் பெரியார் உலகத்திற்கு நன்கொடை கொடுத்தும் மேலும் நன்கொடையை திரட்டும் களப்பணியை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை குறித்தும் கால சூழ்நிலை குறித்தும் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளுக்காக ‘விடுதலை’ சந்தா வழங்க வேண்டியது குறித்தும்,
‘திராவிட மாடல்’ ஆட்சியை 2026 இல் தொடர்ந்து நீடிக்க வேண்டுவதின் அவசியம் குறித்தும் விளக்கமாக பேருரை ஆற்றினார். ஆஸ்திரேலியாவின் இரண்டு நகரங்கள் மெல்போர்ன், சிட்னியில் நடந்த ‘‘நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாடு‘‘ குறித்து பாராட்டியும், வாழ்த்தியும், நன்றி தெரிவித்தும் பேசினார். மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் துரை. சக்திவேல் நன்றியுரை ஆற்றினார்.
தீர்மானங்கள்
கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
‘‘இதுதான்ஆர் எஸ் எஸ் – பாஜக ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
என்ற தலைப்பில் தொடர் சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டு 30-12- 2025 அன்று சேலம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளித்து கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
“உலகமயமாகும் பெரியார்” ஆஸ்திரேலியாவின் மெல்போர்னிலும் சிட்னியிலும் “பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம்-ஆஸ்திரேலியா (PATCA)” “பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) இணைந்து (1, 2.11.2025) நடத்திய ‘‘நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாடு’’ நடத்த வேண்டுகோள் விடுத்த தமிழர் தலைவரும், மனிதநேய மாண்பாளருமான ஆசிரியர் அவர்களுக்கும் அதை ஏற்று ஏற்பாடு செய்து நடத்திய முனைவர் மகிழ்நன் அண்ணாமலை அவர்களுக்கும், டாக்டர் முகமது ஹாருண் காசிம் அவர்களுக்கும் டாக்டர் சோம இளங்கோவன் அவர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நன்றியையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
சேலம் மாவட்ட கழகம் சார்பாக தமிழர் தலைவர் அவர்களின் விருப்பங்களில் ஒன்றான “பெரியார் உலக”த்திற்கு இரண்டாம் கட்டமாக 11,00,000 ரூபாய்க்கு மேல் அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றி தந்தை பெரியார் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து ‘‘சுயமரியாதை நாள் – டிசம்பர் 2’’ என இனிப்பு வழங்கி,சேலம் மாநகரத்தின் நான்கு பகுதிகளில் உள்ள பள்ளிகளில், பகுதிக்கு ஒரு பள்ளியாக தெரிவு செய்து அங்கு படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
‘விடுதலை’ நாளிதழ் சந்தா 100–க்கு மேல் வசூலிப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இரண்டாவது விருப்பமான “திராவிட மாடல்” ஆட்சியினை 2026 – லும் வெற்றி பெற்று சமூக நீதி ஆட்சி நடத்தும் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மீண்டும் அரியணையில் அமர்த்திட தொடர் சூறாவளி பரப்புரை கூட்டம் மேற்கொண்டு, அதன்படி வரும் 30 – டிசம்பர் 2025 அன்று சேலத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்வது எனவும் சேலம் மாநகரில் நடக்க உள்ள அந்த மாபெரும் கூட்டத்திற்கு அனைத்து தோழமை(INDIA) கட்சிகளை அழைப்பது எனவும்,
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரன் அவர்களையும், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்களும் எம்பிக்களும் ஆன எஸ் ஆர் எஸ் அய்யா அவர்களையும், டி.எம்.எஸ். அவர்களையும், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் அவர்களையும், கழக மண்டலத் தோழர்கள் கோட்ட உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பேரூராட்சி நிர்வாகிகள் அனைவரையும் அழைப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
பெரியார் உலகம் நிதி திரட்டலுக்கு பகுதி வாரியாக குழு அமைப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் நிதி திரட்டல் குழுக்களை பகுதிவாரியாக அமைத்தார்.
சூரமங்கலம் பகுதி நிதிக்குழு:
பொறுப்பாளர்கள்
போலீஸ் ராஜு, பழ.பரமசிவம், பேங்க் ராஜு, பொறியாளர் சிவகுமார்
அஸ்தம்பட்டி பகுதி நிதிக்குழு
வழக்குரைஞர் சோ.அசோகன், வழக்குரைஞர் செல்வகுமார், மருத்துவர் சலீம், மணிமாறன்
கொண்டலாம்பட்டி பகுதி நிதிக்குழு
அரங்க இளவரசன், சி. பூபதி, ச.வெ. இராவண பூபதி
அம்மாபேட்டை பகுதி நிதிக்குழு
சு. இமயவரம்பன், மோ. தங்கராஜ், த. சுஜாதா, குமாரதாசன்
அயோத்தியாபட்டினம் ஒன்றியக் கழக நிதிக்குழு
முனைவர் ராஜேந்திரன், துரை சக்திவேல், கமலம் அம்மாள்,
ஏ.ராஜா
சேலம் மத்திய மாநகர நிதிக் குழு
அ.இ. தமிழர் தலைவர், வழக்குரைஞர் ச.சுரேஷ்குமார், பொறியாளர் ச.கார்த்திக், வழக்குரைஞர் கோ. கல்பனா
தலைமை நிதிக்குழு
கி.ஜவகர் – காப்பாளர்
வீரமணி ராஜு- மாவட்டத் தலைவர்
அ.ச. இளவழகன்- மேனாள் மாவட்டத் தலைவர்
மூணாங்கரடு பெ. சரவணன்- மாவட்டச் செயலாளர்
ஊமை ஜெயராமன்- மாநில ஒருங்கிணைப்பாளர்.
கூட்டத்தில் நிதி வசூல் செய்து தருவதாக
உறுதி அளித்தவர்கள்
முனைவர் ராஜேந்திரன் – ரூ.10,000/-(சொந்தம்)
அம்மாபேட்டை கிருஷ்ணசாமி – ரூ.25000/-(வசூல்)
அ.ச. இளவழகன் – ரூ.1,00,000/-(வசூல்)
மூணாங்கரடு பெ. சரவணன் – ரூ.3,00,000/-(வசூல்)
வீரமணி ராஜு ரூ.1,50,000/-(சொந்தம்)+) ரூ.2,00,000/-(வசூல்)
‘விடுதலை’ சந்தா அளித்தவர்கள்
அ.இ. தமிழர் தலைவர் – ரூ. 2000/- ஒரு சந்தா
முனைவர் ராஜேந்திரன்- ரூ.2000/- ஒரு சந்தா
உடையார்பட்டி ஏ.ராஜா – ரூ.2000/- ஒரு சந்தா
வீரமணி ராஜு – ரூ.4000/- (2 புதுப்பித்தல்)
இக்கூட்டத்தில் காவியா, தமிழ்ச்செல்வன், யமுனா தேவி, நிரஞ்சன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எடைக்கு எடை நாணயம் வழங்குவதாக உறுதியளித்தனர்.
இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த தோழர்கள்
மகளிர் பாசறை காவியா- காடையாம்பட்டி, மகளிர் அணி கவுரி காடையாம்பட்டி, முனைவர் நா ராஜேந்திரன்-அயோத்தியாபட்டினம், அஸ்தம்பட்டி பகுதி தலைவர் இல. நடராஜன், அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் மருத்துவர் சலீம், அம்மாபேட்டை குப்புசாமி,அம்மா பேட்டை கிருஷ்ணசாமி, அம்மாபேட்டை கணபதி, உடையாபட்டி ஏ ராஜா, கூ.செல்வம்.
