கொல்கத்தா, நவ. 22- வங்கதேசத்தின் நர்சிங்டி என்ற பகுதியில் நேற்று காலை 10.08 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 புள்ளிகளாக பதிவாகியது
இதன் அதிர்வுகள் மேற்குவங்கத்தின் பல மாவட்டங்களில் உணரப்பட்டது. கொல்கத்தாவில் தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் 30 வினாடிகள் குலுங்கியதாக ஒருவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், ‘‘தனது வாழ்வில் சந்தித்த மிக தீவிர நிலநடுக்கம் என்றும், கொல்கத்தா நகரம் பிளாஸ்டிக் குகைபோல் குலுங்கியது’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
