கான்பூர், நவ.22 உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரண்ட்ஸ் பூங்காவில் துணியில் சுற்றப்பட்ட ஒரு பொருளுடன் தெரு நாய் ஓன்று ஓடியது. அப்போது அமித் திரிவேதி என்பவர் சந்தேகம் அடைந்து அந்த நாயை துரத்தினார். இதில் அந்த நாய் அந்தப் பொருளை போட்டு விட்டு ஓடிவிட்டது.
துணியை அகற்றியபோது பிறந்த குழந்தையின் சிதைந்த உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். கை, கால்கள் இல்லாத அந்த உடலில் மார்பு பகுதி சேதம் அடைந்திருந்தது.இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மருத்துவமனையில் இக்குழந்தை பிறந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. இதன் அடிப்படையிலும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குழந்தையின் உடலை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
குரூப்–2 தேர்வு எழுதியவர்களுக்கு
பிளஸ்டூ வகுப்பில் உயிரியல் பாடம் படித்தால்
கால்நடை ஆய்வாளர் பணிக்கு வாய்ப்பு
டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தல்
சென்னை, நவ.22 டி.என்.பி.எஸ்.சி. ஒருங்கிணைந்த குரூப்2 மற்றும் குரூப்2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. 645 காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இத்தேர்வை 4 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். தேர்வு முடிவு டிசம்பரில் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுதலாக 625 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. பின்சேர்க்கை அறிவிப்பின்படி, தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை உதவிப் பிரிவு அலுவலர், கால்நடைப் பராமரிப்புத் துறை கால்நடை ஆய்வாளர் (கிரேடு2) உள்ளிட்ட புதிய பதவிகளும் இடம் பெற்றுள்ளன. இதில், கால்நடை ஆய்வாளர் பதவியில் மட்டும் 439 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு பட்டப் படிப்புடன், +2இல் உயிரியல் அல்லது தாவரவியல் அல்லது விலங்கியல் பாடம் படித்திருக்க வேண்டும் என்று கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஏ. சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவதுநு: “கடந்த ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஒருங்கிணைந்த குரூப்2 மற்றும் குரூப்2ஏ பணிகளில் அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள், கால்நடை ஆய்வாளர் பணி தொடர்பாக, +2இல் உயிரியல், தாவரவி யல், விலங்கியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா? என்ற பத்தியில் ‘ஆம்’ அல்லது ‘என்பதைப் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக, தேர்வாணையத் தின் இணையதளத்தில் ஓ.டி.ஆர். ‘மீண்டும் திறக்கப்பட்டுள்ளது’ இது நவம்பர் 22 (இன்று) முதல் 25ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை
4 நாட்கள் திறந்திருக்கும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
