மணிப்பூர், நவ.22 ஹிந்து சமூகம் என்றும் அழியாதது என்றும், பண்டைய நாகரி கங்கள் அழிந்தபோதும் இந்த சமூகம் நிலைத்திருந்தது எனவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசியுள்ளார்.
மணிப்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
“உலகில் உள்ள அனைத்து நாடுகளும் எல்லாவிதமான சூழ்நிலைகளையும் கடந்தி ருக்கும். யுனான் (கிரீஸ்), மிஸ்ர் (எகிப்து), ரோமா என உலகின் அனைத்து சிறந்த பண்டைய நாகரிகங்களும் அழிந்தன. ஆனால், நம் நாகரிகத்தில் ஏதோ இருக்கிறது. அதனால்தான் நாம் இன்னும் இருக்கிறோம்” என தெரிவித்தார்.
அசாமில்…
முன்னதாக இந்தவார தொடக்கத்தில் அசாமில் பேசிய மோகன் பகவத்,
“தாய்நாட்டின் மீதான பக்தி, நமது முன்னோர்களின் பெருமை மற்றும் நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைவரும் ஹிந்துக்கள்தான். ஹிந்து என்பதை வெறும் மத அர்த்தங்களில் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஹிந்து மற்றும் ஹிந்துக்களின் கலாச்சாரம் என்பது வெறும் உணவு மற்றும் வழிபாடு மட்டுமல்ல, அனைத்தையும் உள்ளடக்கியது. ஹிந்து மதம் இன்னும் பல மக்களை ஈர்க்கும்.
தங்கள் வழிபாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை விட்டுகொடுக்காவிடினும், நம் நாட்டை, இந்தியக் கலாச்சாரத்தை பின்பற்றினால், நம் மூதாதையர்களை எண்ணி பெருமைப்பட்டால் அந்த முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், ஹிந்துக்கள்தான். பாரதம் என்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் ஹிந்துக்கள்தான். பாரதம், ஹிந்து ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள்தான். இந்தியா ஒரு ‘ஹிந்து ராஷ்டிரம்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தேவையில்லை. நாட்டின் நாகரிக நெறிமுறைகள் ஏற்கெனவே அதனை அடையாளப்படுத்துகின்றன’’ என தெரிவித்தார்.
