மூணாறு, நவ.22 ஆந்திராவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 25 பேர் கொண்ட குழு சத்திரம், புல்மேடு வழியாக வனப்பாதையில் 20.11.2025 அன்று நடந்து சென்றனர்.
அங்குள்ள சீதக்குளம் பகுதிக்குச் சென்ற போது, மல்லிகார்ஜுனரெட்டி, 42, என்பவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அதுபோல, இந்த பாதையில் சபரிமலைக்கு நடந்து சென்ற, சேலத்தை சேர்ந்த அமிர்தலிங்கம், 57, திருப்பதியைச் சேர்ந்த ஜிதேந்திரன், 42, ஆகியோருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த சன்னிதானம் தீய ணைப்பு துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித் தனர்.
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற
டிசம்பர் 7 வரை அவகாசம் நீடிப்பு
சென்னை, நவ.22 சென்னை மாநகராட்சியில் இதுவரை 65,422 செல்லப்பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 24,477 பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளின் உரிமையா ளர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், உரிமம் பெறுவ தற்கான காலக்கெடு நவம்பர் 23லிருந்து டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளின் உரிமை யாளர்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் (ஞாயிறு உட்பட) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உரிமம் பெறும் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
