கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு தேஜஸ்வி வாழ்த்து

பாட்னா, நவ.21 பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி 10ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜேடியு தலைவர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,”பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கும், அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீகார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள்.

புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் என்றும் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு பீகார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பீகார் சட்டமன்றத்தின் எதிர் கட்சித் தலைவராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்.

சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10 சதவீத தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும்.

எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி  எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். இந்த தேர்தலில் தேஜஸ்வி  ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி இன்றி அலைக்கழிப்பு

எஸ்.அய்.ஆர். விவகாரத்தில் தேர்தல் ஆணையம்மீது மம்தா சீற்றம்!

கொல்கத்தா, நவ.21 தமிழ்நாட்டை போலவே மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது. எஸ்.அய்.ஆர். விண்ணப்பங்களுடன் பிஎல்ஓக்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சேகரித்து வருகின்றனர். டிசம்பர் 4ஆம் தேதிக்குள் எஸ்.அய்.ஆர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், இப்பணி தீவிர கதியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், எஸ்.அய்.ஆர். விவாரத்தில் உரிய பயிற்சி அளிக்காமல் ஊழியர்கள் அலைக்கழிக்கப்படுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு மம்தா   எழுதிய கடித்தில் கூறியிருப்பதாவது: எஸ்அய்ஆர் நடைமுறையை நாங்கள் எதிர்க்கவில்லை.   அதில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி இல்லை என்பதை பதிவு செய்கிறோம். உரிய பயிற்சி இல்லாத காரணத்தால், பலருக்கு அந்த படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி எனத் தெரியவில்லை. இணையபடிவத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் வாக்காளர்களுக்கு புரிவதில்லை. அதுபற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

பெரும்பாலான பிஎல்ஓக்கள் ஆசிரியர்கள் அல்லது முன்களப் பணியாளர்களாகவே உள்ளனர். அவசர கதியில், எஸ்.அய்.ஆர். பணியை மேற்கொள்வதால், அவர்களின் பிரதானப் பணியில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. தங்கள் அடையாளம், இருப்பிடத்திற்கான ஆதார ஆவணங்களாக எதை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புரிதல் வாக்காளர்களிடம் இல்லை. அது பற்றி பிஎல்ஓக்களுக்கும் முழு அளவில் பயிற்சி அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *