‘‘தெற்கிலும் சமூகநீதியின் ஜோதியை ஏந்திச்சென்ற பெரியார் ராமசாமி” என்ற மராத்திப் பாடலைப் பாடிய

2 Min Read

ஜாதி ஒழிப்புப் போராளி ஜோதிஜக்தாப்பிற்கு
5 ஆண்டுகளுக்குப் பிறகு பிணை

புதுடில்லி, நவ. 21 பீமா கோரேகான் வழக்கில் இளம் செயற்பாட்டாளர் ஜோதி ஜக்தாப்பிற்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது

பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இளையவரான, 38 வயதான ஜோதி ஜக்தாப், அய்ந்து ஆண்டு களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜோதி ஜக்தாப் ஒரு சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் இசைக் கலைஞர்.

இவர் ஹிந்துத்துவா, ஜாதியவாதம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதி ராகத் தனது பாடல்கள் மற்றும் கலை வடிவங்கள் மூலம் குரல் கொடுத்தவர். பீமா கோரேகான் வன்முறைச் சம்பவத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சுமார் 15 பேரில் இவரும் ஒருவர்.

இவர் மீது தேசத்துரோகம், இந்தியா வின் அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுத்தல் போன்ற கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட இவர், தற்போது உச்சநீதி மன்றத்தின் உத்தரவு மூலம் பிணை பெற்றுள்ளார்.

பீமா கோரேகான் வழக்கு என்றால் என்ன?

மகாராஷ்ட்ராவில் உள்ள பீமா கோரே கான் என்ற இடத்தில், 2018 ஜனவரி 1 அன்று நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு இது.

இந்த இடத்தில், தாழ்த்தப்பட்ட சமூக அமைப்புகள் கொண்டாடிய ஒரு நிகழ்வின் போது, வன்முறை வெடித்தது.

இந்த வன்முறைக்குக் காரணம், அதற்கு முந்தைய நாள் (டிசம்பர் 31, 2017) நடந்த ‘எல்சார் பரிஷத் (சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் கூட்டம்)’ என்ற மாநாட்டில், கலந்து கொண்டவர்கள் பாஜக மற்றும் ஹிந்துத்துவ அமைப்புகளின் சமூகநீதிக்கு எதிரான போக்கை கடுமையாக கண்டித்துப் பேசினர். இதன் தாக்கம் தாழ்த்தப்பட்ட சமூ கத்தினரை விழிப்புணர்வு பெறச்செய்யும் ஒன்றாக அமைந்தது. இதனால் மாநாட்டில் பேசியவர்களை மாவோயிஸ்ட் பேச்சாளர்கள்  என்று குற்றம் சாட்டப்பட்டது.

பிணை ஏன் முக்கியமானது?

தேசத்துரோகம் மற்றும் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள், பிணை பெறுவதைக் கடினமாக்குகின்றன.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலானோர் பல ஆண்டுகளாகச் சிறையில் இருந்தனர். கிறிஸ்தவ மத போதகரும், சமூக சேவகருமான ஸ்டெயின் சாமி சிறையில் இருந்து சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்தார்.

அதேபோல் பேராசிரியர் சாயி உடல் முழுவதுமாக முடங்கி இருந்தபோதும் அவருக்கு பிணை வழங்காமல் இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் 4 ஆண்டு களுக்குப் பிறகு பிணை வழங்கியது.

ஜோதி ஜக்தாப் போன்ற ஒரு இளம் செயற்பாட்டாளர், மீதான இந்த குற்றச்சாட்டு இனி எதிர்காலத்தில் ஜாதி மற்றும் ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகப் பேசுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்று கருதப் படுகிறது.

ஜோதி ஜக்தாப் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் சமூக செயற்பாட்டாளர், தனது வளமான குரல் மூலம் மகாராட்டிரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் ஜாதிக்கு எதிராகவும், சமத்துவம், சமூகநீதியை வலியுறுத்தும் நாட்டுப்புறப்பாடல்களைப் பாடி பரப்புரை செய்பவர்.

இவரது ‘‘தெற்கிலும் சமூகநீதி ஜோதியை கொண்டு சென்றவர் பெரி யார்’’ என்ற பாடலை தந்தை பெரியார் பிறந்தநாளில் மகாராட்டிர அம்பேத்காரிய அமைப்பினர்  பாடிப் பகிர்ந்து கொண்டா டுவார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *