அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் மறைந்த திராவிடர் கழக பாடகர் வே.பெரியசாமி சகோதரர் வே.கந்தசாமியின் 90ஆவது பிறந்தநாள் விழாவில் 23.11.2023 அன்று காலை மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருட்டிணன் தலைமையில் அரியலூர் ஒன்றிய துணைத் தலைவர் மருதமுத்து, ஒன்றிய துணை செயலாளர் ஆட்டோ தர்மா, தமிழ் களம் அரங்கநாடான், சிற்பக் கலைஞர் பாரிவள்ளல், மற்றும் அவர் நண்பர்களும், உறவினர்களும் பயனாடை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து அஸ்தினாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா பயனாடை அணிவித்தார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.