டில்லி கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு காஷ்மீர் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஜம்மு – காஷ்மீர் மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

1 Min Read

புதுடில்லி, நவ.19 ஜம்மு – காஷ்மீா் மாணவா் சங்கம் பல வட மாநிலங்களில் உள்ள காஷ்மீா் மாணவா்கள் டில்லியில் நிகழ்ந்த கார் வெடிப்புக்குப் பின்னா் சுயவிவரம், வெளியேற்றுதல் மற்றும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனா் என்று குற்றம்சாட்டியது. மேலும், பிரதமா் நரேந்திர மோடியை சமூகத்தின் ‘அவதூறுகளை நிறுத்த’ பகிரங்கமாக தலையிடுமாறும் (17.11.2025) வலியுறுத்தியது.

இது குறித்து நடைபெற்ற செய்தியாளா் சந்சிப்பில் ஜே.கே.எஸ்.ஏ. தேசிய ஒருங் கிணைப்பாளா் நசீா் குவாமி பேசியதாவது:

‘‘தாக்குதலுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட சமூகம் குறிவைக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் டில்லி போன்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் வட்டாரங்களில் காஷ்மீா் மாணவா்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

காஷ்மீா் மாணவா்கள் இந்தியாவின் ஜனநாயகத்தை நம்புகிறார்கள்; பயங்கரவாதத்தை அல்ல. ஆனால், அவா்கள் மாநிலங்கள் முழுவதும் உள்ள அதிகாரிகளாலும் உள்ளூா் மக்களாலும் சுயவிவரப்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்படுகிறார்கள். பல நில உரிமையாளா்கள் காஷ்மீா் குத்தகை தாரா்களை தங்கள் அறைகளை காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனா். இதனால், பல மாணவா்கள் அச்சத்தால் வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா் .

டில்லி கார் வெடிப்பு குறித்து எந்தவொரு விசாரணைக்கும் சங்கத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை . ஆனால், காஷ்மீா் மாணவா்களின் பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். கூட்டு சந்தேகத்தை தடுக்க வேண்டும். பிரதமா் ஒரு பொது அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மற்ற குடிமக்களைப் போலவே காஷ்மீரிகளும் இந்த நாட்டின் ஒரு அங்கம். செங்கோட்டைக்கு வெளியே நடந்த கார் வெடிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். நியாயமான விசாரணை மற்றும் குற்றவாளிகள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *