சடையார்கோவில், மே 9- 8.5.2023 அன்று மாலை 6.30 மணியளவில் உரத்தநாடு ஒன்றியம் சடை யார்கோவில் கடைத்தெருவில் வைக்கம் போராட்ட விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
வடக்கு பகுதி செயலாளர் ப.இராஜகோபால் அனைவரை யும் வரவேற்று உரையாற்றினார்.
கிளைக்கழகத் தலைவர் குழந்தைவேல் தலைமை வகித்து உரையாற்றினார்.
மாவட்ட பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, ஒன்றியத்தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு கிளைக்கழக செய லாளர் நமச்சுவாயம் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றி னார்கள்,
கலைஇலக்கிய அணி ஒன்றிய அமைப்பாளர் மன்றோ.மதியழ கன், உடற்கல்வி இயக்குநர் வெ.நா.கிட்டு, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராம கிருஷ்ணன், மாவட்டச் செயலா ளர் அ.அருணகிரி, மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் ஆகியோர் உரையாற்றி னார்கள்.
கழக பேச்சாளர் இராம. அன்பழகன் வைக்கம் போராட்ட வரலாறு, திராவிட மாடலின் சிறப்புகள் மற்றும் கழக கொள் கைகளை விளக்கி சிறப்புரை யாற்றினார்,.
ஒன்றிய கழக துணைத் தலைவர் இரா.துரைராசு, தி.மு.க பொறுப்பாளர்கள் நார்த்தேவன் குடிக்காடு இரா.பழனிவேல், சடையார்கோவில் தி.மு.க கிளைச் செயலாளர் கு.கோபு, தி.மு.க. கோ.சரவணன். துறையுன்டார்கோட்டை தி.மு.க பொறுப்பாளர் இராமதாஸ், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் கவிபாரதி, அம்மாப் பேட்டை ஒன்றிய கழக செயலாளர் சவு.காத்தையன், நெய்வாசல் ஞானபிரகாசம், பொறியாளர் பாலகிருஷ்ணன், சடையார்கோவில் ம.கவின் குமார், கண்ணை கிழக்கு பாரதி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.