மீரட், நவ.19 உத்தரப் பிரதேசத் தில் மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த நிகழ்வு மீண் டும் மகாபாரதத்தை நினைவிற்குக் கொண்டு வருகிறது.
இக்கொடுர நிகழ்வு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் அளித்துள்ள புகாரில் ‘‘மீரட்டில் கிவாய் கிரா மத்தைச் சேர்ந்த டானீஸ் என்பவருக்கும் எனக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது,
திருமணத்தன்றே குடிபோதையில் என்னை வைத்துச் சூதாட ஆரம்பித்து விட்டார். எதிர்த்துக் கேட்டதற்கு அவரும், என்னுடைய மாமியாரும் சேர்ந்து அடித்து உதைத்தனர். என் கணவர் சூதாட்டத்தில் தோற்றதால், எட்டு பேர் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். பலமுறை கருக்கலைப்பு செய்ததோடு, ஆசிட் ஊற்றியும், ஏரியில் தள்ளியும் கொலை செய்ய முயன்றனர்” என்றார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், பினோலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
மனைவியைச் சொத்தாகக் கருதி, அவளைக் கட்டுப்படுத்தவும், வன்முறைக்கு உட்படுத்தவும் கணவருக்கு உரிமை உண்டு என்ற ஆணாதிக்க மனநிலைதான் மகாபாரதத்தில் தருமன் –- பாஞ்சாலி கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்பட்டது. அது இன்றும் தொடர்வது இழிவு.
இது, காலங்கள் கடந்தும் பெண்ண டிமைத்தனம், ஆணாதிக்கம் மற்றும் வன்முறைக்கு எதிரான போராட்டம் இன்னும் தொடர வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை இச்செய்தி காட்டுகிறது.
