மகாபாரதத்தின் தொடர்ச்சியா? மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் கைது

1 Min Read

மீரட், நவ.19 உத்தரப் பிரதேசத் தில்  மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த நிகழ்வு மீண் டும் மகாபாரதத்தை நினைவிற்குக் கொண்டு வருகிறது.

இக்கொடுர நிகழ்வு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் அளித்துள்ள புகாரில் ‘‘மீரட்டில் கிவாய் கிரா மத்தைச் சேர்ந்த டானீஸ் என்பவருக்கும் எனக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது,

திருமணத்தன்றே குடிபோதையில் என்னை வைத்துச் சூதாட ஆரம்பித்து விட்டார். எதிர்த்துக் கேட்டதற்கு அவரும், என்னுடைய மாமியாரும் சேர்ந்து அடித்து உதைத்தனர். என் கணவர் சூதாட்டத்தில் தோற்றதால், எட்டு பேர் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். பலமுறை கருக்கலைப்பு செய்ததோடு, ஆசிட் ஊற்றியும், ஏரியில் தள்ளியும் கொலை செய்ய முயன்றனர்” என்றார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், பினோலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

மனைவியைச் சொத்தாகக் கருதி, அவளைக் கட்டுப்படுத்தவும், வன்முறைக்கு உட்படுத்தவும் கணவருக்கு உரிமை உண்டு என்ற ஆணாதிக்க மனநிலைதான் மகாபாரதத்தில் தருமன் –- பாஞ்சாலி கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்பட்டது. அது இன்றும் தொடர்வது இழிவு.

இது, காலங்கள் கடந்தும் பெண்ண டிமைத்தனம், ஆணாதிக்கம் மற்றும் வன்முறைக்கு எதிரான போராட்டம் இன்னும் தொடர வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை இச்செய்தி காட்டுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *