10.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், எம்.பி.சி. தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் உண்டா? என்று கேள்வி கேட்டு பேசிய உரை வீச்சு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ராமதாஸ் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் போராட்டம் நடத்தினார். போராட்டம் அத்துமீறி வன்முறையாக மாறியதில் வன்னியர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர். தாழ்த்தப்பட்ட மக்களின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, அவர்கள் வீட்டின் உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அப்போது அமெரிக்கா சென்றிருந்த அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் திரும்பி வந்ததும் அனைத்து ஜாதி சங்கங்கள் கூட்டத்தை நடத்தினார். கலந்து கொண்ட ஜாதி சங்கங்கள் அளித்த தனித்தனி ஜாதி அளிப்பு கணக்கெடுப்பை பார்த்து எம்ஜிஆர் கிண்டலாக இந்த கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தமிழ்நாட்டின் மக்கள் தொகையை விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது என்று அந்த கோப்புகளை ஓரங்கட்டி வைத்து விட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 1989 இல் பதவிக்கு வந்த கலைஞர் அவர்கள் தன்னிச்சையாக கிடப்பில் போடப்பட்டிருந்த கோப்புகளை எடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எம்பிசி என்ற பெயரில் 20 சதவீத வன்னியர்கள் கேட்காமலேயே அவர்களுக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு ஆணை வழங்கி வெளியிட்டார்.
இந்தியாவில் இரண்டு பிரிவு தான். பார்ப்பனர்கள், பனியாக்கள், ஜாட்டுகள், பார்சிகள் முதலிய பிரிவினரை முற்படுத்தப்பட்ட ஃபார்வேர்ட் கம்யூனிட்டி என்றும் மற்றவர்களை பிற்படுத்தப் பட்டவர்கள் என்று அழைக்கப்பட்டு வந்தது. இதில் சிறிது வித்தியாசம் காட்டுவதற்காக எஸ்சி எஸ்டி அரசியலமைப்பு சட்டத்தில் தனியாக காட்டப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத எம்.பி.சி. என்ற புதிய பிரிவை உருவாக்கி 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியவர்தான் கலைஞர் அவர்கள்.
இதை எம்ஜிஆர் செய்யவில்லை ஜெயலலிதா அம்மையாரும் செய்யவில்லை. இது மட்டுமல்ல இறந்து போன 27 குடும்பத்தினருக்கும் அவர்கள் சமூக நீதிக்காக போராட்டம் நடத்தியதில் இறந்து போனார்கள் என்று கருதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 33 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது மட்டுமல்ல அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் பென்ஷன் போன்ற ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்தார்.
வன்னிய சமுதாய மக்களுக்கும் சேர்த்து போராடிவரும் நான் கலைஞரை ஆதரித்துப் பேசவில்லை. அவர் என்ன அப்படி பேசவும் சொல்ல வில்லை. ஆனால் நியாயத்தை சொல்ல வேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது அதனால் இதை பேசுகிறேன். இன்று இவ்வளவு நல்லது செய்த கலைஞரை எதிரியாக மடைமாற்றம் செய்ய முயற்சி செய்யும் ராமதாஸ் இதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பல புள்ளி விவரங்களுடன் அரிய தகவல்களை வெளியிட்டு பேசிய முழு உரையையும் Periyar Vision OTT-இல் இன்றே பாருங்கள். தெளிவு பெறுங்கள்
– A.பன்னீர்செல்வன்,
மாங்காடு சென்னை.
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
