தேர்தல் ஆணையம் அசாமுக்கு மட்டும் தனிச் சலுகை

புதுடில்லி, நவ.18 அசாமில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங் களில் நடக்கும் எஸ்.அய்.ஆர். போல அல்லாமல், அசாமில் வாக் காளர்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ, ஆவணம் சமர்ப்பிக்கவோ தேவையில்லை. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஒ) வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை உறுதி செய்வார்கள் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனி யன் பிரதேசங் களில் வாக்காளர் பட் டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம். இந்த பட்டியலில் தான் தற்போது அசாம் மாநிலமும் இணைந் துள்ளது. அசாம் மாநி லத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலை யில் அங்கும் சிறப்பு வாக் காளர் திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக அசாம் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை பிறப்பித்து உள்ளது. அதன்படி சிறப்புத் திருத்தத்தை மேற் கொள்ள அசாம் மாநிலத்திற்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தகுதி தேதியாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய பலர் அந்த மாநிலத்தில் வாக்காளர்களாக பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) நிலை நிலுவையில் உள்ளதால், தேர்தல் ஆணையம் அசாஅம் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.அய்.ஆர்.) நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அசாமில் 2019 ஆம் ஆண்டு (என்.ஆர்.சி.) பட்டியலில் 3.3 கோடி விண்ணப்பதாரர்கள் இருந்த பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட 19.6 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அசாமில் வாக்காளர்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ, ஆவணம் சமர்ப்பிக்கவோ தேவை யில்லை. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஒ) வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை உறுதி செய்வார்கள் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், அவசர அவசரமாக எஸ்.அய்.ஆர். பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனக்கூறி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காள மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தமிழ்நாட்டில் எஸ்.அய்.ஆர். பணி தொடங்கி நடந்து வருகிறது. வீடு, வீடாக ஊழியர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள். கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய இந்த பணிகள், வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *