அய்யர் என்றால் ஆன்மிகமா? மின்சாரம்

‘‘அய்யர்’’ என்று அழைத்தோம் ‘ஆன்மிகம் தெரிந்தது.’

‘‘தேவர்’’ என்று அழைத்தோம் ‘தெய்வீகம் மணந்தது’.

‘‘கள்ளர்’’ என்று அழைத்தோம் ‘வீரம் விளையாடியது’.

‘‘நாயக்கர்’’ என்று அழைத்தோம் ‘நிர்வாகம் நிறைந்திருந்தது’.

‘‘ரெட்டியார்’’ என்று அழைத்தோம் ‘உணவின் உன்னதம் தெரிந்தது’.

‘‘படையாட்சியார்’’ என்று அழைத்தோம் ‘படைகளும் நடுங்கியது.’

‘‘வன்னியர்’’ என்று அழைத்தோம் ‘வாய்மை வளர்ந்தோங்கியது’.

‘‘முதலியார்’’ என்று அழைத்தோம் ‘முகமே அமைதி என அறிவித்தது’.

“நாடார்” என்று அழைத்தோம் ‘நானிலம் முழுதும் வியாபாரம் பெருகியது’.

“பிள்ளைமார்” என்று அழைத்தோம் ‘பிறருக்கு உதவும் மனப்பான்மை தெரிந்தது’.

“செட்டியார்” என்று அழைத்தோம் ‘சிக்கனத்தின் உண்மை தெரிந்தது’.

‘‘ேதவேந்திரகுல வேளாளர்’’ என்று அழைத்தோம் ‘தன்மானத்தின் தன்மை புரிந்தது’.

‘‘கொங்கு வேளாளர்’’ என்று அழைத்தோம் ‘உழைப்பின் உண்மை தெரிந்தது’.

” யாதவர்’’ என்று அழைத்தோம் ‘குடும்பப் பாங்கு புரிந்தது’.

‘‘மூப்பனார்’’ என்று அழைத்தோம் ‘முகமலர்ச்சி யோடு வரவேற்கும் வளமை புரிந்தது’.

‘‘பறையர்” என்று அழைத்தோம் ‘உழைப்பின் விவரம் தெரிந்தது’.

ஆம் “ஜாதிக்கு ஒரு குணம்’’ இருக்கத்தான் செய்தது ‘ஜாதிப் பெயரோடு அழைத்தபோது அனைத்து சமுதாயமும் அமைதியாய்த் தான்வாழ்ந்தது’.

‘‘திராவிடன்’’ என்று அழைத்தபோதுதான் ‘திருடுவது’ எப்படி என்று தெரிந்தது.

– எக்ஸ் தளத்தில் பிரசன்ன அய்யர் என்பவரின் பதிவு 9.11.2025

எவ்வளவு வன்மம்! எப்பாடுபட்டேனும் ஜாதியை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் எத்தனைப் பாய்ச்சல்!

‘அய்யர்’ என்று அழைத்ததில் ஆன்மிகம் தெரிந்ததாம் – ஆணவம் தெரிந்தது என்று சொல்ல மாட்டார்கள்! ெசான்னால் பிடரியில் அடி விடும்!

என்ன ஆன்மிகம் அது? நாம் சொல்வதைவிட ‘சோ’ ராமசாமியை விட்டே சொல்லச் செய்வதுதான் ‘சொர்ண புஷ்பமாக’ இருக்கும்.

‘துக்ளக்’ வார ஏட்டில் (26.10.2016 பக்கம் 23) அதைச் சொல்லியிருக்கிறார்.

கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதியாவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?

‘சோ’வின் பதில்: அரசியல்வாதி ஆவதற்கு பொய் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்குப் ெபாய்யை அருள் வாக்காக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையில் நடிக்கத் தெரிய வேண்டும்.

– இதுதான் ‘சோ’ ராமசாமியின் அருள்வாக்கு.

இந்த யோக்கியதையில் ‘அய்யர்’ என்று அழைத்தோம் ஆன்மிகம் தெரிந்ததாம். சொல்லியிருப்பவர் பிரசன்ன அய்யர்! அதுதான் முக்கியம்!

இந்த ஆன்மிகம் இன்னொன்றையும் சொல்லும்… கோயிலுக்குச் செல்லுவோர், ‘‘காணிக்கையை உண்டியலில் போடாதீர் – அய்யர் அர்ச்சனைத் தட்டில் போடுவீர்!’’

சொன்னவர் யார்? இந்தியாவின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்.

ஆரியக் கூத்தாடினாலும் ‘காசு’ காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும்.

ஒரு நிதி அமைச்சராக  இருக்கக் கூடியவரே சட்ட மீறலை சன்னமாக சொல்லியிருக்கிறார்.

‘காரணம் இல்லாமலா காரியம்?’ அய்யர் சம்பந்தப்பட்டதாயிற்றே!

ஆன்மிகம் என்பது திருட்டு என்று ஆன பிறகு – ‘அய்யர் என்று அழைத்தோம் ஆன்மிகம் தெரிந்தது!’ என்று திருவாளர் பிரசன்ன அய்யர் சொல்லுவதில் ஆச்சரியம் என்ன?

அய்யர் என்றால் கொலைகாரர்களுக்கும் அடைக்கலம் கொடுப்பார்கள் – அந்தக் கொலைகாரரின் கூடாரத்துக்கும் ஆன மட்டும் ஆவன செய்வார்கள்.

மஹா பெரியவாளே முண்டாசு கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பார்.

இதற்கும் ‘துக்ளக்’ ஏட்டைத்தான் துலாக்கோலாகக் கொள்ள வேண்டும். ‘சோ’ ராமசாமியின் அந்தரங்க சீடர் திருவாளர் குருமூர்த்தியைத்தான் கூண்டில் ஏற்ற வேண்டும்.

கேள்வி: பக்தர்களின் வாழ்வில் பல அற்புதச் செயல்களைப் புரியும் பகவான் ஹிந்து மதத்துக்கு ஆபத்து என்று வரும்போது அதைத் தடுத்ததாக சரித்திரம் இல்லையே,  என்ன காரணம்?

குருமூர்த்தி அய்யரின் பதில்: ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டபோது பிரபல வக்கீல் டி.வி.ஆர். சாஸ்திரியை அழைத்து, தடையை நீக்க  நடவடிக்கை எடுக்கச் சொன்னவர் காஞ்சிப் பெரியவர். சாஸ்திரி நேருவிடம் பேசித் தடையை நீக்க உதவினார்.

(‘துக்ளக்’ 12.5.2021 பக்கம் 15)

தான் அணிந்த பூணூலை அறுத்து எறிந்தவர் காந்தியார். சுதந்திர இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருக்கும். அரசுப் பணம் ஒரு காசுகூட மதக் காரியங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்று சொன்னவர் காந்தியார்! அப்படி காந்தியார் சொன்ன 53ஆம் நாள் பார்ப்பனர் நாதுராம் கோட்சேவினால் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படிப்பட்ட பார்ப்பனரை நினைத்தால் ஆன்மிகம் தெரியுமாம்! ஆன்மிகத்தின் யோக்கியதை எத்தகையது என்பது இப்பொழுது புரிகிறதா?

ஒவ்வொரு ஜாதியார் பெயரையும் சொல்லி – ஒவ்வொரு குணத்தையும் பூமாலையாகச் சூட்டுகிறார் திருவாளர் பிரசன்ன அய்யர்!

சுருக்கமாகச் சொன்னால், பார்ப்பனரைத் தவிர்த்த மற்ற ஜாதியினர் அனைவரும் அவாள் சாஸ்திரப்படி ‘சூத்திராள்’ தானே!

‘சூத்திரன்’ என்றால் வருண தருமப்படி – மனுதர்மப்படி விபசாரி மகன்தானே!  (அத்தியாயம் 8  – சுலோகம் 415)

அப்படி இப்பொழுது பச்சையாகக் கூற முடியாது! ஏன்? சொன்னால் பற்கள் எல்லாம் பல்லாங்குழி விளையாடத்தான் பயன்படும்.

‘‘சூத்திரன்… என்றால் ஆத்திரம் கொண்டடி!’’ இது கருஞ்சட்டைக்காரரின் தன்மான முழக்கம்!

‘திராவிடன்’ என்று அழைத்த போதுதான் திருடுவது என்று தெரிந்தது என்று எழுதும் அளவுக்குப் பார்ப்பனர்களுக்குத் திமிர் முளைத்திருக்கிறது.

உண்மையைச் சொல்லப் போனால் ‘இந்து’ என்று சொன்னால்தான் அந்த அர்த்தம் என்று பாரசீக மொழியில் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது .

‘கோயில் பூனைகள்’ என்ற நூலே வெளி வந்துள்ளது. எழுதியவர்  கோவைக்கிழார் என்று அழைக்கப்படும் கோ.ம.  இராமச்சந்திரன் செட்டியார் ஆவார்.

அய்யப்பன் கோயிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் மோசடி வரை சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனரே!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டாலர் சேக்ஷந்திரி என்ற பெயரிலேயே ஒருவர் உலவி வந்தார். ஏழுமலையான் உருவம் பொறித்த டாலர்களைத் தனியாக விற்று வந்ததால் இந்த அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

கோயிலில் சிலை திருட்டிலிருந்து, பல வகைகளிலும் மோசடிகளுக்கு உடந்தையாக இருப்பவர்கள் கோயில் அர்ச்சகர்களே என்று சர். சி.பி. ராமசாமி அய்யர் ஆணையம் அறிக்கையாகவே ஆதாரத்துடன் கொடுத்துள்ளதே! இந்த யோக்கியர்கள்தான் ‘திராவிடன்’ என்றால் திருடுவது எப்படி என்று தெரிந்தது என்று எழுதுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *