வாக்குத்திருட்டின் மற்றொரு முகம்
ஜெய்ப்பூர், நவ.16 ராஜஸ்தான் மாநிலம், சீர்மாதுபுர் பகுதியில் வசிக்கும் மேகராஜ் பட்வா என்ற நபருக்கு, ஒரே நேரத்தில் ஏழு வெவ்வேறு வாக்காளர் அடையாள அட்டைகள் (Voter ID Cards) வழங்கப்பட்ட விவகாரம், தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மேகராஜ் பட்வா, முதல் முறையாக வாக்காளர் அட்டையைப் பெற விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்த சில நாள்க ளிலேயே, அவருக்கு ஒன்றுக்குப் பதிலாக ஏழு தனித்தனி வாக்காளர் அடையாள அட்டைகள் அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்தன. இந்த ஏழு அட்டைகளிலும் வெவ்வேறு தேர்தல் ஒளிப்பட அடையாள அட்டை எண் பதிவு செய்யப்பட்டிருந்தன.
மேகராஜ் பட்வா இந்த விவகாரம் குறித்துப் புகார் அளித்தபோது, அதிகாரிகள் சுதாரித்துக்கொண்டு சரி செய்யாமல், இதை வெளியில் கூறவோ சமூக வலைதளங்களில் வெளியிடவோ வேண்டாம் என்று மிரட்டி உள்ளனர்.
இது தொடர்பாக மேகராஜ் பட்வா கூறும்போது, உள்ளூர் பாஜக பிரமுகர் ஒருவர் தேர்தல் வாக்காளர் அடையாள அட்டைப் பெற்றுத்தர உதவுவதாகக் கூறி ஆவணங்களை வாங்கிச் சென்றார் என்றார்
நாடு முழுவதும் பாஜகவினரும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து மோசடிகளைத் தொடர்ந்து நடத்துவதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
இந்த ஏழு அட்டைகளும், ஏழு வெவ்வேறு நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அதன் விளைவு என்னவாக இருக்கும்?
காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது
நாடு முழுவதும், ‘‘வாக்கைத் திருடுவோர், பதவியிலிருந்து விலகு!’’ என்ற முழக்கத்துடன் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி, முன்னெடுத்து, இதைத் தேர்தல் முறைகேடுகளுக்கு ஓர் உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் உயர் மட்ட விசாரணைக்குக் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
