தேர்தலில் வைப்புத்தொகை இழந்தார்!
பாட்னா, நவ.16– தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அடித்துக் கொல்லப்படுவதாகப் போலி காணொலிகளை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபரும், பத்திரிகையாளருமான மணீஷ் காஷ்யப், சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுப் படுதோல்வி அடைந்துள்ளார்.
« மணீஷ் காஷ்யப், பீகார் மாநிலத்தின் சம்பர்ன் மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்கினார்.
« அவர் 50, 000 வாக்குகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்து வைப்புத்தொகை இழந்தார்.
மணீஷ் காஷ்யப், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு, கொல்லப்படுவதாகப் பொய்யான மற்றும் வதந்தியான காணொலிகளைப் பரப்பினார். இந்த காணொலிகள் பீகார் மற்றும் தமிழ்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின.
இந்தச் சம்பவம் குறித்துத் தமிழ்நாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பீகாரில் தலைமறைவாக இருந்த மணீஷ் காஷ்யப்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்து செய்து மதுரை சிறையில் அடைத்தனர் தற்போது பினையில் இருக்கும் அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.
ஆண்டுக்கு 20000 ஆயிரம் கூட வருவாய் இல்லாமல் இருந்த இவரது வங்கியில் போலி காணொலி வெளியிடுவதற்கு முன்பு 3 மாதங்களில் 40 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட்தும் தமிழ்நாடு காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் துவக்கத்தில் பாஜகவில் இருந்தார் பின்னர் இவரை பாஜ்கா ஓரங்கட்டியதால் இவர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
பாஜக எப்போதும் பிறரை கைதுடைக்கும் டிஸ்யு பேப்பர் போன்றுதான் கையாளும் வேலை முடிந்த பிறகு தூக்கி வீசிவிடும் என்பதற்கு மனீஷ் கஷ்யப் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
